Monday, March 23, 2009

அய்க்கூ கவிதைகள்


அந்தி சரியச் சரிய
தென்படுகின்றன
புதிய முகங்கள்
**************

சூரியனாய் பிரகாசிக்கும்
பெண்ணின் சுதந்திரம்
மேற்குமுட்டும்வரை
**************

பழம்தின்று பசியாறிய
பறவையறியாது
எச்சத்தின் மதிப்பு
**************

எங்கோ தூரத்தில்
கேட்கிறது
ஒற்றைக் குயிலோசை

12 comments:

தேவன் மாயம் said...

அந்தி சரியச் சரிய
தென்படுகின்றன
புதிய முகங்கள்///

அய்க்கூ என்றால் அன்புமணி என்று ஆகிவிட்டதே!

தேவன் மாயம் said...

பழம்தின்று பசியாறிய
பறவையறியாது
எச்சத்தின் மதிப்பு///

அருமை அன்பு!

தேவன் மாயம் said...

சூரியனாய் பிரகாசிக்கும்
பெண்ணின் சுதந்திரம்
மேற்குமுட்டும்வரை///

ரொம்ப யதார்த்தம்

குடந்தை அன்புமணி said...

//அய்க்கூ என்றால் அன்புமணி என்று ஆகிவிட்டதே//

அப்படியெல்லாம் இல்ல தலைவா... என்னைவிட ஜாம்பவான்கள் எல்லாம் இருக்காங்க...

Raju said...

அருமையான ஹைக்கூ கள்..
கடைசி ஒன்னுதான் புரியல...

தேவன் மாயம் said...

உங்களுக்கு பட்டாம்பூச்சி விருது கிடைத்து உள்ளது!
வாழ்த்துக்கள்!

குடந்தை அன்புமணி said...

//டக்ளஸ்....... said...
அருமையான ஹைக்கூ கள்..
கடைசி ஒன்னுதான் புரியல...//

எங்கோ தூரத்தில் கேட்கும் அந்த ஒற்றைக்குயிலின் ஓசையை கேட்கும் அளவுக்கு நானும் அமைதி சூழ்ந்த தனிமையில் இருப்பதை உணர்த்துவதாக எழுதியுள்ளேன்.

குடந்தை அன்புமணி said...

//thevanmayam said...
உங்களுக்கு பட்டாம்பூச்சி விருது கிடைத்து உள்ளது!
வாழ்த்துக்கள்!//

நன்றி டாக்டரைய்யா!

Unknown said...

ஹய்! நண்பா! நமக்குப் பிடித்த ஹைக்கூ(அய்கூ)
கவிதைகள்.ரொம்ப ஆவலோடு ஓடி வந்தேன்.
ஏமாத்திட்டே நண்பா!கோவிச்சுக்க கூடாது. இவைகள்
(கடைசி தவிர)ஹைக்கூ விதியில் அடங்க வில்லை. நானும் ஒரு சில மாதம் முன்பு எழுதினேன்.

போடாங்க.. கூ..இதெல்லாம் பொய்கூக்கள் என்று ப்லபேர் சொன்னார்கள்.நொந்து போனேன்.படித்து
தெரிந்து கொண்டேன்.எழுதினேன்.பார்க்க.
படிக்க.கண்டிப்பா கருத்துச் சொல்க நண்பரே.

http://raviaditya.blogspot.com/search/label/ஹைகூக்கள்

அடுத்து: ஹைக்கூவின் பார்முலா:-

தினசரிவாழ்கையில் நாம் சந்திக்கும் சில மின்னல்/கணநேர snapshot/flash lightningஅனுபவங்கள்/கணங்கள் ஏற்படுத்தும் உணர்ச்சிகளை/சலனங்களை/பிரமிப்புகளை மூன்று வரியில் காட்சிப் படுத்துவதுதான் ஹைகூ.ஒரு நேரடி அனுபவம்.

இதில் உருவகம்/உவமை/மிகை/வருணனை/பிரசாரம் இருக்கக் கூடாது.சமூகச் சாடல்கள் இருக்கக் கூடாது.காட்சிகளை விளக்கக்கூடாது. அனுபவத்தின் பின் விளைவுகளைப் பற்றிச்சொல்லக் கூடாது.சுட்டிக் காட்டக் கூடாது.

ஒரு மின்னல் போல் காட்டி மறையும் ஒரு “சடக்’ என்ற அனுபவ உணர்ச்சி மூன்று வரிகளில் வெளிப்படுவது

மூச்சிறைக்க வந்து ஏறிய
காலி ரயில் பெட்டியில்
பிணம்

(இந்த காட்சியை யோசித்துப் பாருங்கள்)

மற்றவை என் பதிவில்

நண்பா எழுதுங்க. வாழ்த்துக்கள்!

"உழவன்" "Uzhavan" said...

//பழம்தின்று பசியாறிய
பறவையறியாது
எச்சத்தின் மதிப்பு//

நம்ம தலைவருங்க சிலைகளுக்குதான் தெரியும் அதன் மதிப்பு :-)

புதியவன் said...

//சூரியனாய் பிரகாசிக்கும்
பெண்ணின் சுதந்திரம்
மேற்குமுட்டும்வரை//

நிதர்சனமான ஹைக்கூ...

ஆதவா said...

அந்தி சரியச் சரிய
தென்படுகின்றன
புதிய முகங்கள்


அழகான காட்சிப்பா அன்புமணி! கச்சிதமான ஹைக்கூ!


பழம்தின்று பசியாறிய
பறவையறியாது
எச்சத்தின் மதிப்பு


எப்படிங்க இப்படி???

எங்கோ தூரத்தில்
கேட்கிறது
ஒற்றைக் குயிலோசை


அழகு அழகு!!! காட்சிப்பா!!!!