Wednesday, March 25, 2009

ஊடல் பொழுதுகள்...



பனிவிழும் இரவு
நீளும் நிசப்தத்தை
தின்று தீர்க்கி்ன்றன
தகிக்கும் நினைவுகள்

கனத்த மெளனத்தை
கலைத்துப்போடும்
தெருநாய்கள்

உறக்கம் துறந்த
விழிகளில்
தொக்கிநிற்கும்
ஊடல் பொழுதுகள்!

16 comments:

சென்ஷி said...

:-)))

நல்லாருக்குங்க...

//கனத்தை மெளனத்தை
கலைத்துப்போடும்
தெருநாய்கள்//

கனத்த மௌனத்தைன்னு வரும்ன்னு நினைச்சேன். ஆனா இதுவும் நல்லாயிருக்குது!

குடந்தை அன்புமணி said...

//கனத்த மௌனத்தைன்னு வரும்ன்னு நினைச்சேன். ஆனா இதுவும் நல்லாயிருக்குது!//

இதோ மாற்றிவிட்டேன். நன்றி தலைவா... உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்!

கார்த்திகைப் பாண்டியன் said...

நண்பா.. நீங்க எப்ப இருந்து இப்படி கவிதை எழுத ஆரம்பிச்சீங்க.. நல்லா இருக்கு நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பனிவிழும் இரவு
நீளும் நிசப்தத்தை
தின்று தீர்க்கி்ன்றன
தகிக்கும் நினைவுகள்//

வார்த்தைகள் அருமை

ஆ.சுதா said...

//உறக்கம் துறந்த
விழிகளில்
தொக்கிநிற்கும்
ஊடல் பொழுதுகள்!//
இதற்கு பின்னும் இன்னும் வரிகள் உள்ளனவே..

வரிகள் அனைத்தும் நன்று

குடந்தை அன்புமணி said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
நண்பா.. நீங்க எப்ப இருந்து இப்படி கவிதை எழுத ஆரம்பிச்சீங்க.. நல்லா இருக்கு நண்பா..//

ஏதோ, உங்களையெல்லாம் பார்த்து நானும் முயற்சி பண்ணிப்பார்த்தேன்.

குடந்தை அன்புமணி said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
//உறக்கம் துறந்த
விழிகளில்
தொக்கிநிற்கும்
ஊடல் பொழுதுகள்!//
இதற்கு பின்னும் இன்னும் வரிகள் உள்ளனவே..//

அப்படியா... எனக்கு வார்த்தைகள் தொக்கி நின்றிவிட்டது...

ஆ.சுதா said...

குடந்தை அன்புமணி நான் கேக்கவந்தது
'இதற்குப்பின்னும் வரிகள் உள்ளனவோ'
என்று ஏனென்றால் நாம் பதிவிடுவது முழுமையான நேரம் இருந்து அல்ல இருக்கும் வேலைகளுக்கு நடுவில் அவசரத்தில் எழுதுகின்றோம் (இது உங்களுக்கு பொருந்துமா என தெறியவில்லை ஆனால் பெரும்பாலோனர் இப்படிதான் என்று நினைக்கின்றேன்) அவ்வகையில் உங்கள அவ்வழகான கவிதையில் இன்னும் வரிகள் உண்டோ என நினைத்து விட்டேன் வேரொன்றும் என்ன வில்லை. 'வோ க்கு பதில் வே என்று அவசரத்தில் தட்டச்சு செய்து விட்டேன் அன்புமணி.

குடந்தை அன்புமணி said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
குடந்தை அன்புமணி நான் கேக்கவந்தது
'இதற்குப்பின்னும் வரிகள் உள்ளனவோ'
என்று ஏனென்றால் நாம் பதிவிடுவது முழுமையான நேரம் இருந்து அல்ல இருக்கும் வேலைகளுக்கு நடுவில் அவசரத்தில் எழுதுகின்றோம் //

இதற்குப்பின்னும் வார்த்தைகள் இணைத்தால் நன்றாக இருக்கும் என்று தாங்கள் கூறுவதாக நினைத்துவிட்டேன். நானும் வேலைகளுக்கு மத்தியில்தான் பதிவிடுகிறேன். ஆனால் முழுமையாகவே பதிவிடுவேன். தங்களுக்கு வேலைகள் அதிகமிருப்பின், நேரமிருக்கும்போது இடுகையில் பதிவுகளை இட்டு தற்காலிக பதிவுகளாக (வரைவாக)சேமித்துக்கொள்ளுங்கள். பின்பு முழுமையாக முடிந்ததும், திருத்தி பதிவிடுங்கள்.

ஆ.சுதா said...

நன்றி அன்புமணி
உங்கள் யோசனையை
பின்பற்றுகிறேன்

Anonymous said...

சூழலை கண்முன் விவரிக்கிறது கவிதை!

நன்றாக உள்ளது நண்பரே!

தேவன் மாயம் said...

பனிவிழும் இரவு
நீளும் நிசப்தத்தை
தின்று தீர்க்கி்ன்றன
தகிக்கும் நினைவுகள்///

நல்லா வருது கவிதை!!

தேவன் மாயம் said...

உறக்கம் துறந்த
விழிகளில்
தொக்கிநிற்கும்
ஊடல் பொழுதுகள்!//

அருமை அன்பு!

குடந்தை அன்புமணி said...

வருகை தந்து வாசித்த அனைவருக்கும் நன்றி!

புதியவன் said...

//உறக்கம் துறந்த
விழிகளில்
தொக்கிநிற்கும்
ஊடல் பொழுதுகள்!//

அழகிய கவிதை...இந்த அழகிய ஊடலுக்கு பின் நிச்சயம் கூடல் தான் இல்லை அன்புமணி...

ஆதவா said...

நல்லா இருக்குங்க ஆனா சின்னதா போச்சுது!! முத்து சொன்னாப்ல கொஞம் வரிகள் சேர்த்திருக்கலாம்...