அர்த்தம் நழுவிய
சொல் நான்
அகராதியில் எப்படி ஏறுவது?
************
உன்சின்னத்தில்
என்காதல்
செல்லாத ஓட்டு
*********
துயரத்தின் தோட்டம்
இந்த வாழ்வு
நான்
கண்ணீர் இறைக்கப்
பிறந்தேன்
**********
நிலவின் கிரணத்தை
உடுத்துபவளே
உன் ஒளியால்
என்னை
மறைத்துவிடு
**********
சொற்களின் வழியாகத்தான்
மெளனத்தை
அடையமுடியும்
நான்
உன்வழியாக
காதலை அடைந்தேன்
**********
நீ இல்லா இதயத்தில்
கல்லறையின் நிழல்
கவியட்டும்
- கோ.பாரதிமோகன்
14 comments:
அருமையான வரிகள் :)
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
எல்லாக் கவிதையுமே அருமை..
//சொற்களின் வழியாகத்தான்
மெளனத்தை
அடையமுடியும்
நான்
உன்வழியாக
காதலை அடைந்தேன்//
இதை மிகவும் ரசித்தேன்..
கலக்கல் கவிதைகள்!!!
ஒவ்வொன்றையும் சிலாகித்துப் படித்தேன்.. பகிர்ந்தமைக்கு நன்றி அன்பு!!
அருமையான கற்பனையாலும் சொல்லாலும் எழுதிய்ரிக்கிறார்...
அத்தனையும் நல்ல கஜல்.
அதுவும்
இது..
//உன்சின்னத்தில்
என்காதல்
செல்லாத ஓட்டு//
டைமிங்கா தேர்ந்தேடுத்திருக்கின்றீர்கள்
பகிர்வுக்க மிக்க நன்றி
இப்படி நிறைய கஜல் கவிதைகளை
அறிமுகப்படுத்துவதற்கு மிக்க நன்றி அனபுமணி அவர்களே..
//நிலவின் கிரணத்தை
உடுத்துபவளே
உன் ஒளியால்
என்னை
மறைத்துவிடு//
ரசித்தேன்...அருமையான பகிர்வு நண்பரே...
சொற்களின் வழியாகத்தான்
மெளனத்தை
அடையமுடியும்
நான்
உன்வழியாக
காதலை அடைந்தேன்///
கஜலின் வழியாக கவிஞராகி விட்டீர்கள் அன்புமணி,
//thevanmayam said...
சொற்களின் வழியாகத்தான்
மெளனத்தை
அடையமுடியும்
நான்
உன்வழியாக
காதலை அடைந்தேன்///
கஜலின் வழியாக கவிஞராகி விட்டீர்கள் அன்புமணி,//
இது என் நண்பர் எழுதிய கஜல்!
//உன்சின்னத்தில்
என்காதல்
செல்லாத ஓட்டு//
ஆனா நாங்க போடுறது நல்ல ஓட்டு..
அருமையான வரிகள்..
பகிர்ந்தமைக்கு நன்றி
நல்லா இருக்கு.
//சொற்களின் வழியாகத்தான்
மெளனத்தை
அடையமுடியும்
நான்
உன்வழியாக
காதலை அடைந்தேன்//
பிடித்தது. நல்ல தேர்வு. உங்கள் நண்பருக்கும் வாழ்த்துகள்.
அனுஜன்யா
artham thavariya sol aaeram artham solliyadhu....sellatha votum therthalil vendradhu....kanneeril valarantha nanthavanam kollai vanappu...oliel unnai maraikalam uyril adhu mudiyuma...kathalin short cut key mounam....kalaraien nizhal valikiradhu....intha kavithaigal nenjil vazhgiradhu..nice kajals....
\\உன்சின்னத்தில்
என்காதல்
செல்லாத ஓட்டு\\
தேர்தல் ஸ்பெஷலா
\\சொற்களின் வழியாகத்தான்
மெளனத்தை
அடையமுடியும்
நான்
உன்வழியாக
காதலை அடைந்தேன்\\
கஜல் போல் இருக்கு
துயரத்தின் தோட்டம்
இந்த வாழ்வு
நான்
கண்ணீர் இறைக்கப்
பிறந்தேன்
naanum than
Post a Comment