Friday, April 10, 2009

அய்க்கூ கவிதைகள்


அழகிய வலை
பின்னிக் காத்திருக்கும்
சிலந்தி

***********

வலிக்காதா
ஒற்றைக்காலில் நிற்கும்
நடராசனே!

************

மின்தடை இரவு
கூடிப்பேசும்
உறவுகள்

************
ஆயுள்முழுக்க
ஆடைமாற்றவேயில்லை
வண்ணத்துப்பூச்சி

17 comments:

தேவன் மாயம் said...

வலிக்காதா
ஒற்றைக்காலில் நிற்கும்
நடராசனே!///

கவி அன்பே வருக!!

தேவன் மாயம் said...

ஆயுள்முழுக்க
ஆடைமாற்றவேயில்லை
வண்ணத்துப்பூச்சி///

அழகிய சிந்தனை!

தேவன் மாயம் said...

மின்தடை இரவு
கூடிப்பேசும்
உறவுகள்///

இப்படி யோசித்ததேயில்லை நான்!

ச.முத்துவேல் said...

2 ஆவதைத்தவிர மற்றவையெல்லாமே நன்றாக உள்ளன அன்புமணி.ரசித்தேன்.

பழமைபேசி said...

//மின்தடை இரவு
கூடிப்பேசும்
உறவுகள்//

இது நல்லா இருக்கு...

ஆனா, ஈரடிப்பயனறு(Haiku) கவிதையோட இலக்கணத்தையும் தெரிஞ்சுக்குங்க தம்பி!

Unknown said...

கடைசி இரண்டு சூப்பர்.

வாழ்த்துக்கள்!

ஆ.சுதா said...

//அழகிய வலை
பின்னிக் காத்திருக்கும்
சிலந்தி//

யாரபிடிக்க... சிலந்தி நீங்கலா?
வலை நல்லா பின்னிரிக்கீங்க.

//மின்தடை இரவு
கூடிப்பேசும்
உறவுகள்//

இது நல்ல சிந்தனை.

vasu balaji said...

நல்லா இருக்கு.

பழமைபேசி said...






ஆதவா said...

//மின்தடை இரவு

கூடிப்பேசும்

உறவுகள்//

என்னைக் கூசிய வரிகள்.... இது குறித்து ஒரு அனுபவக் கட்டுரை ஒன்றை எழுதிவருகிறேன். விரைவில்!!..

ஒற்றைக்கால் நடராசனும் அழகிய சிந்தனை!!!

வாழ்த்துகள் குடந்தை அன்புமணி!!!

அ.மு.செய்யது said...

//மின்தடை இரவு
கூடிப்பேசும்
உறவுகள்//

இந்த வரிகள் எனக்கு ரெம்ப பிடிச்சிருக்குங்க...!!!!

புதியவன் said...

//மின்தடை இரவு
கூடிப்பேசும்
உறவுகள்//

இந்த ஹைக்கூ நல்லா இருக்கு அன்புமணி...

தமிழ் said...

தங்களுக்கு ஒரு அன்பு அழைப்பு

அன்புடன்
திகழ்

goma said...

ஆயுள்முழுக்க
ஆடைமாற்றவேயில்லை
வண்ணத்துப்பூச்சி.....
அதனால்தான் அவர்களுக்குள் பேதமில்லை பிணக்கும் இல்லை.
நாளை என்ன உடுத்தலாம் என்ற கவலையும் இல்லை

Anonymous said...

மின் தடை உறவுகளின் இன்றைய நிலை...வண்ணத்துப்பூச்சி வார்த்தைகளை மறக்க செய்தது வண்ணம் இன்றி...சிலந்தி வலை சிக்காதவரை சீர் நிலை... ஒற்றை வரி ஒவியம்கள் இந்த ஹைகூ கவிதைகள்

ராமலக்ஷ்மி said...

//ஆயுள்முழுக்க
ஆடைமாற்றவேயில்லை
வண்ணத்துப்பூச்சி//

ரசித்தேன்:)!

"உழவன்" "Uzhavan" said...

//மின்தடை இரவு
கூடிப்பேசும்
உறவுகள்//

அருமை..