Saturday, May 16, 2009

வட்டங்கள் (வட்டத்திற்குள் பெண்)


வட்டத்திற்குள் பெண் என்ற கவிதை எழுத திகழ்மிளிர் என்னையும் அழைத்திருந்தார். எனக்கு எதுவும் தோன்றவில்லை. இக்கவிதை 'காற்றில் மிதக்கும் ஆகாயம்' என்ற கவிதைத்த தொகுப்பில் இடம்பெற்றிருந்தது. அதை உங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறேன்...

ட்டத்தைவிட்டு
வெளியேற வேண்டுமெனில்
தாண்டிச்ச செல்ல
துணிவு வேண்டும்
இல்லையேல்
அடைபட்டு கிடக்கவேண்டும்

தயக்கங்களால்
தாமதிக்க நேரிட்டது
இப்போது
தாண்டவும் முடியாமல்
சிறைப்படவும் முடியாமல்
வட்டங்களும்
வாழ்க்கையும்

- அ.கார்த்திகேயன், சேலம்

போன்: 9952722942

11 comments:

தமிழ் said...

பதிவுக்கு நன்றி நண்பரே

அருமையான கவிதையைப் பகிர்ந்தமைக்கு மீண்டும் ஒரு முறை
நன்றி

/வட்டத்தைவிட்டு
வெளியேற வேண்டுமெனில்
தாண்டிச்ச செல்ல
துணிவு வேண்டும்
இல்லையேல்
அடைபட்டு கிடக்கவேண்டும்

தயக்கங்களால்
தாமதிக்க நேரிட்டது
இப்போது
தாண்டவும் முடியாமல்
சிறைப்படவும் முடியாமல்
வட்டங்களும்
வாழ்க்கையும்/

அத்தனை வரிகளும் அருமை

அன்புடன்
திகழ்

Anonymous said...

உண்மையை ஊர்ஜிதமாய் சொல்லியிருக்கார்...இன்றும் இன்னிலை தொடர்கதையாய்......

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்தல்.

நன்றி அன்புமணி!

ஆ.சுதா said...

பகிர்தல் கவிதை அருமையான தேர்வு
அன்புமணி.

ஆதவா said...

நல்ல பகிர்வு அன்புமணி!! நேற்றுதான் யோசித்தேன். எங்க நம்மாளூ பதிவைக் காணோமேன்னு!!!

நட்புடன் ஜமால் said...

\\தாண்டவும் முடியாமல்
சிறைப்படவும் முடியாமல்
வட்டங்களும்
வாழ்க்கையும்\\

அருமை ...

புதியவன் said...

//தாண்டவும் முடியாமல்
சிறைப்படவும் முடியாமல்
வட்டங்களும்
வாழ்க்கையும்//

நல்லா இருக்கு இந்த வரிகள்
அருமையான பகிர்வு அன்புமணி...

தமிழிச்சி said...

நல்ல ஒரு கவிதையைப் பகிர்ந்ததிற்கு நன்றி சார்.

' தாண்டவும் முடியாமல்
சிறைப்படவும் முடியாமல்
வட்டங்களும் வாழ்க்கையும் '
சில பெண்களைப் பொறுத்தவரை இது எத்தனை உண்மை என்று தோன்றுகிறது.

Suresh said...

மிக அழகான தலைப்பு அதற்க்கு ஏற்ற புகைப்படம்...

//நினைவுகளால் உளியிடை மலையன்றோ?!//

கவிதையில் உண்மையும் தைரியம் வேண்டியதன் அவசியத்தையும் சொன்னிங்க..

Suresh said...

//தயக்கங்களால்
தாமதிக்க நேரிட்டது
இப்போது
தாண்டவும் முடியாமல்
சிறைப்படவும் முடியாமல்
வட்டங்களும்
வாழ்க்கையும்//

இதுவும் அழகு... தாமதம் சில நேரங்களில் இருக்க கூடாது

"உழவன்" "Uzhavan" said...

//தயக்கங்களால்
தாமதிக்க நேரிட்டது//

பெரும்பாலான நேரங்களில் பெரும்பாலோர்க்கு ஏற்படும் தயக்கம். நல்ல வரிகள்