Thursday, July 9, 2009

காதலின் வலிமை

எத்தனையோ
பொய்கள் சொல்லியிருக்கிறேன்
உன்னிடத்தில்...

பொய்யென்றே தெரிந்தும்
ஏற்றுக் கொண்டிருக்கிறாய்
அனைத்தையும்!

'என்னை மறற்திடுங்க' என்று
நீ சொன்ன பொய்யை
பொய்யென்றே
நினைத்திருந்தேன்
பிரிவு நேரும் வரை.

காதலின் வலிமையை
காலங்கள் உணர்த்துமென
காத்திருந்தேன்.

ஜாதியின் வலிமையை
உணர்த்தியது
உன் திருமணம்!

(இந்த கவிதை காதலில் தோல்வியுற்ற என் நண்பனுக்காக...)

21 comments:

பழமைபேசி said...

ப்ச்

Venkatesan P said...

நல்ல கவிதை. உங்கள் நண்பனை கவலைப்பட வேண்டாம் என்று சொல்லுங்கள். அவனுக்காக ஒரு தேவதை காத்துக்கொண்டிருக்கிறாள் என்பதை மறந்துவிட வேண்டாம் என்று சொல்லுங்கள். வாழ்த்துக்கள்..

ஆர்வா said...

நன்றாக இருந்தது. இன்னும் கொஞ்சம் பெரிதாக எழுதி இருக்கலாம். ஏனெனில் காதலின் வலி பெரிது. என்னுடைய காதல் தோல்வி பற்றிய கவிதையை படித்து பாருங்களேன். இது யூத் புல் விகடனால் தேர்ந்தெடுக்கப்பட்டது. கவிதையின் தலைப்பு "நேற்று இறந்து விட்டேன்". உங்கள் கருத்துக்களை எனது தளத்தில் பதியுங்கள்

ஆ.சுதா said...

கவிதை பலமாயிருக்கு!!!
வலி சொல்லுது கவிதை.
அந்த நண்பர் யாருங்க அன்புமணி!

ராமலக்ஷ்மி said...

வலியின் ஆழத்தை அழுத்தமாய் சொல்லி விட்டது வரிகள். அருமை அன்புமணி!

அ.மு.செய்யது said...

ஜாதியின் வலிமையை முதலில் வலுவிழக்க செய்ய வேண்டும்.

வைரமுத்து சொன்னது நினைவிருக்கிறது.

// ஐரோப்பாவில் கல்யாண தோல்விகள் அதிகமாம்.
நம்மூரில் தான் காதல் தோல்விகள் அதிகம் //

உங்கள் கவிதையும் அழகு.சம்பந்த பட்ட நண்பரை அதிலிருந்து மீள வகை செய்யுங்கள்.

அப்துல்மாலிக் said...

ஜாதியால் காதல்வேண்டுமானால் உடையலாம் ஆனால் அழியாது

நண்பருக்கு ஆருதல் சொல்லுங்கள்

குடந்தை அன்புமணி said...

வருகைக்கும் நன்றி பழமைபேசி

குடந்தை அன்புமணி said...

Venkatesan P said...
நல்ல கவிதை. உங்கள் நண்பனை கவலைப்பட வேண்டாம் என்று சொல்லுங்கள். அவனுக்காக ஒரு தேவதை காத்துக்கொண்டிருக்கிறாள் என்பதை மறந்துவிட வேண்டாம் என்று சொல்லுங்கள். வாழ்த்துக்கள்..

நிச்சயமாக... அவனுக்கென்று ஒருத்தி காத்துக் கொண்டுதான் இருப்பாள். மிக்க நன்றி வெங்கடேஷ்...

குடந்தை அன்புமணி said...

கவிதை காதலன் said...
நன்றாக இருந்தது. இன்னும் கொஞ்சம் பெரிதாக எழுதி இருக்கலாம். ஏனெனில் காதலின் வலி பெரிது. என்னுடைய காதல் தோல்வி பற்றிய கவிதையை படித்து பாருங்களேன். இது யூத் புல் விகடனால் தேர்ந்தெடுக்கப்பட்டது. கவிதையின் தலைப்பு "நேற்று இறந்து விட்டேன்". உங்கள் கருத்துக்களை எனது தளத்தில் பதியுங்கள்

நிச்சயமாக வருகிறேன் நண்பா...

குடந்தை அன்புமணி said...

ஆ.முத்துராமலிங்கம் said...
கவிதை பலமாயிருக்கு!!!
வலி சொல்லுது கவிதை.
அந்த நண்பர் யாருங்க அன்புமணி!

செல்வம் என்று பெயர். அவனைப் பற்றி ஒரு பதிவே போடலாம்.

குடந்தை அன்புமணி said...

ராமலக்ஷ்மி said...
வலியின் ஆழத்தை அழுத்தமாய் சொல்லி விட்டது வரிகள். அருமை அன்புமணி!

உங்கள் தொடர் வருகை மகிழ்ச்சியளிக்கிறது... நன்றி.

குடந்தை அன்புமணி said...

//அ.மு.செய்யது said...
ஜாதியின் வலிமையை முதலில் வலுவிழக்க செய்ய வேண்டும்.

வைரமுத்து சொன்னது நினைவிருக்கிறது.

// ஐரோப்பாவில் கல்யாண தோல்விகள் அதிகமாம்.
நம்மூரில் தான் காதல் தோல்விகள் அதிகம் //

உங்கள் கவிதையும் அழகு.சம்பந்த பட்ட நண்பரை அதிலிருந்து மீள வகை செய்யுங்கள்//

மெல்ல தேற்றிக் கொண்டிருக்கிறோம்.வைரமுத்து சொன்னதை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

குடந்தை அன்புமணி said...

//அபுஅஃப்ஸர் said...
ஜாதியால் காதல்வேண்டுமானால் உடையலாம் ஆனால் அழியாது

நண்பருக்கு ஆருதல் சொல்லுங்கள்//

உண்மையான வார்த்தை.ஆறுதல் சொல்லிவருகிறோம்.

ஆ.ஞானசேகரன் said...

//'என்னை மறற்திடுங்க' என்று
நீ சொன்ன பொய்யை
பொய்யென்றே
நினைத்திருந்தேன்
பிரிவு நேரும் வரை.//

நல்லாயிருக்கு,.. கடைசியில் சில வருத்ததுடன்

Anonymous said...

ஹைய்யோ காதல் தோல்வி சொன்னாவே கண் கலங்கும் இதயம் வலிக்கும் காதல் வலி அனுபவிச்சா மட்டுமே தெரியும் ஆனால் பகைவனுக்கும் வேண்டாம்....கண்ணீரோடு தான் திரும்புகிறேன் வலியை ஏந்திக் கொண்டு....

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//'என்னை மறற்திடுங்க' என்று
நீ சொன்ன பொய்யை
பொய்யென்றே
நினைத்திருந்தேன்
பிரிவு நேரும் வரை.//

காதலிக்கும் போது எல்லாமே எதிர்மறையாத்தான் தெரியுது ... இது காதலின் சாபம் .. இல்லனா சப்ப பிகரலா ஐஸ்வர்யாராய் ரேஞ்சிக்கு கற்பனை பண்னிட்டு ... நண்பரை விட்டுதள்ள சொல்லுங்க .. கவிதை நல்லாஇருக்கு

"உழவன்" "Uzhavan" said...

காதலைவிட நட்புதான் சாதியை ஒழிக்க வல்லது.
தோல்வி கண்டவர்கள் துவண்டுவிடாதீர்கள். வாழ்ந்துகாட்டுவதுதான் வாழ்க்கையின் அழகு.

தமிழிச்சி said...

வலி தெரிகிறது வார்த்தைகளில். நல்ல கவிதை.

ஹேமா said...

//'என்னை மறற்திடுங்க' என்று
நீ சொன்ன பொய்யை
பொய்யென்றே
நினைத்திருந்தேன்
பிரிவு நேரும் வரை.//

ஏமாந்த நெஞ்சத்து அலறல்.

வணக்கம் மணி.இன்றுதான் உங்கள் பதிவின் பக்கம் வந்து போகிறேன்.
நிறைவாய் இருக்கிறது பதிவுகள்.
வருவேன்.

Unknown said...

good