Monday, July 27, 2009

நிலாப் பெண்ணே... (தினமலர்- வாரமலரில் எனது கவிதை)



•பெண்ணே உன்னை
நிலவாக
மலராக
கதிரின் ஒளியாக
கற்பனை செய்ய
என் மனம் ஏற்கவில்லை.

•காரணம் என்னவென்று
கண்மணியே புரிகிறதா...

•நிலவும் ஒருநாள்
தேய்ந்துவிடும்

•மலரும் மணத்தை
இழந்துவிடும்

•கதிரின் ஒளியும்
மங்கிவிடும்

•ஆகவேதான்
பெண்ண உன்னை...

• பி.கு: இது தினமலர்- வாரமலரில்...ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொன்னூற்றி ஒன்றில் வந்த கவிதை. ஹி... ஹி...

26 comments:

தமிழ் said...

வாழ்த்துகள்

துபாய் ராஜா said...

நல்லாத்தான் இருக்கு.

Raju said...

அப்ப 1991 வது வாழ்த்துக்கள் அன்புமணி அண்ணே..!

பழமைபேசி said...

ஆயிரத்தில் ஒன்னா இருந்தாலும், விண்மீன் விண்மீன்தானே?

நையாண்டி நைனா said...

nallaa irukke annaathey.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

:-)...

ஹேமா said...

மணி,படம் நல்ல வடிவு.நீங்கள் சொன்ன பெண்ணைப்பற்றின கருத்தை யோசித்துப் பார்த்தால் உண்மைதான்.

கவிதைக்குப் பொய்யும் ஒரு அழகுதானே !

butterfly Surya said...

கவிதைக்கு பொய் அழகு.

பின் குறிப்பில் மணிக்கு மெய் அழகு.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

கவிதை நன்றாக உள்ளது. என் jackpoem.blogspot.com வருகை தாருங்கள். உங்களிடமிருந்து வருகின்ற கருத்துகள் என்னை மென்மேலும் வளர்க்கும் என்பதை மறவாதீர்கள்.

நன்றி...

நர்சிம் said...

வாழ்த்துக்கள்..(91ல் சொன்னதாக நினைத்துக் கொள்ளவும்)

அப்துல்மாலிக் said...

தல இது நீங்க எழுதிய கவிதையா... அப்பவே வெளிவந்துவிட்டதா

நல்லாயிருக்கு

வாழ்த்துக்கள்

ஆ.சுதா said...

அப்பவேவா!!! நல்லா இருக்கு அன்புமணி.

sakthi said...

அழகான கவிதை

அருமை அன்பு சார்

அ.மு.செய்யது said...

1991ல் எனக்கு ஆறுவயசு....அண்ணே !!!

நீங்க ரொம்ப பெரியவரு !!!! வாழ்த்துக்கள்.

சம்பத் said...

நல்ல கவிதை.....

ம்ம்ம்....நான் கூட புதுசோனு நினச்சேன்.. :)

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள்

நல்லாயிருக்கு நண்பா

Anonymous said...

கவிதை நல்லாயிருக்குப்பா..அப்புறம் கொடுத்த பார் ஒரு பன்ச்...1991..ஹஹஹ எப்ப இருந்தால் என்ன? அப்ப வாழ்த்த முடியலை இப்ப பி லேட்டேட் வாழ்த்துக்கள்...

குடந்தை அன்புமணி said...

வருகைக்கும் கருத்துகும் நன்றி...

திகழ்மிளிர்
துபாய் ராஜா
டக்ளஸ்
பழமைபேசி
நையாண்டி நைனா
ஜகதீஸ்வரன்

குடந்தை அன்புமணி said...

//ஹேமா said...
மணி,படம் நல்ல வடிவு.நீங்கள் சொன்ன பெண்ணைப்பற்றின கருத்தை யோசித்துப் பார்த்தால் உண்மைதான்.

கவிதைக்குப் பொய்யும் ஒரு அழகுதானே !//


கவிதைக்கு பொய் அழகுதான்... ஆனால் என் கண்மணியே அழகுதானே... அதனால் பொய்யுரை தேவையில்லையென்று நினைத்தேன்.

குடந்தை அன்புமணி said...

நன்றி... வருகைக்கும், வாழ்த்துக்கும்...

வண்ணத்துப்பூச்சியார்
நர்சிம்
அபுஅஃப்ஸர்
முத்துராமலிங்கம்
சக்தி

குடந்தை அன்புமணி said...

//அ.மு.செய்யது said...
1991ல் எனக்கு ஆறுவயசு....அண்ணே !!!

நீங்க ரொம்ப பெரியவரு !!!! வாழ்த்துக்கள்.//

நானாத்தான் மாட்டிக்கிட்டனா... ஙே ...

குடந்தை அன்புமணி said...

//சம்பத் said...
நல்ல கவிதை.....

ம்ம்ம்....நான் கூட புதுசோனு நினச்சேன்.. :)//

அதுஇருக்கட்டும்...
நீங்க என் கடைக்கு வர்றது புதுசுதானே...

அடிக்கடி வாங்க.

குடந்தை அன்புமணி said...

//தமிழரசி said...
கவிதை நல்லாயிருக்குப்பா..அப்புறம் கொடுத்த பார் ஒரு பன்ச்...1991..ஹஹஹ எப்ப இருந்தால் என்ன? அப்ப வாழ்த்த முடியலை இப்ப பி லேட்டேட் வாழ்த்துக்கள்...//

நன்றிப்பா...

"உழவன்" "Uzhavan" said...

அட.. நண்பா சொல்லவேயில்ல. சூப்பர்

ஆர்.வேணுகோபாலன் said...

வாரமலரில் படித்தபோதே ரசித்தேன்! பாராட்ட வாய்ப்புக் கிடைத்தால் விட்டு விடுவேனா? அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

ஆர்.வேணுகோபாலன் said...

வாரமலரில் படித்தபோதே ரசித்தேன்! பாராட்ட வாய்ப்புக் கிடைத்தால் விட்டு விடுவேனா? அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!