Friday, July 31, 2009

ஈரோடு பதிவர்களே...

ஈரோடு பதிவர்களே...

ஜுலை 31, வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 11 இரவு 9.30 வரை மக்கள் சிந்தனைப் பேரவை வழங்கும் ஈரோடு புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.


ஜுலை 31, வெள்ளிக்கிழமை மாலை தொடங்கும் விழாவில் ஸ்டாலின் குணசேகரன், மயில்சாமி அண்ணாதுரை போன்றோர் கலந்து கொள்கிறார்கள்.


ஆகஸ்ட் 1, சனிக்கிழமை...

பேராசிரியர் ஞானசம்பந்தன் 'கற்பனவும் இனி அமையும்' என்ற தலைப்பிலும், வழக்கறிஞர் சுமதி 'நேய அருள் மெய் அன்றோ?' என்ற தலைப்பிலும் சிறப்புரை வழங்குகிறார்கள்.

ஆகஸ்ட் 2, ஞாயிற்றுக்கிழமை...

த. உதயசந்திரன் 'உலகை மாற்றிய புத்தகங்கள்' என்ற தலைப்பிலும், கவிஞர்- பாடலாசிரியர் அறிவுமதி 'பச்சைத் தமிழ்' என்ற தலைப்பிலும் சிறப்புரை.


ஆகஸ்ட் 3, திங்கட்கிழமை...

பேராசிரியர் பெரியார்தாசன் 'மனமது செம்மையானால்' என்ற தலைப்பிலும், வழக்கறிஞர் த. இராமலிங்கம் 'நிற்க அதற்குத் தக' என்ற தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள்.


ஆகஸ்ட் 4, செவ்வாய்கிழமை...

பேராசிரியர் அப்துல் காதர் 'பழைய கடல் புதிய அலை' என்ற தலைப்பிலும், கவிஞர் பா. விஜய் 'புத்தகமும் சினிமாவும்' என்ற தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள்.


ஆகஸ்ட் 5, புதன்கிழமை...


பேராசிரியர் த. இராஜராம் அவர்கள் 'நல்லதோர் வீணை' என்ற தலைப்பிலும், எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன் 'கற்றுக் கொடுக்கும் கதைகள்' என்ற தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள்.


ஆகஸ்ட் 6, வியாழக்கிழமை...


பழ. கருப்பையா அவர்கள் 'யோசிக்கும் வேளையில்' என்ற தலைப்பிலும், பத்திரிகையாளர் சுதாங்கன் 'மேவும் விரல் யார் உனக்கு?' என்ற தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள்.


ஆகஸ்ட் 7, வெள்ளிக்கிழமை...

தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் 'இனி ஒரு விதி செய்வோம்' என்ற தலைப்பிலும், திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் 'எய்த விரும்பியதை எய்தலாம்' என்ற தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள்.


ஆகஸ்ட் 8, சனிக்கிழமை...

மத்திய இணையமைச்சர் எஸ். ஜெகத்ரட்சகன் 'தேடிவரும் தென்றல்' என்ற தலைப்பிலும், பர்வின் சுல்தானா 'உதவாதினி ஒரு தாமதம்' என்ற தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள்.


ஆகஸ்ட் 9, ஞாயிற்றுகிழமை...

டாக்டர் சுதா சேஷய்யன் 'வையத் தலைமை கொள்' என்ற தலைப்பிலும், அருட் தந்தை ஜெகத் கஸ்பர் 'மண்ணில் கால்பதித்து வானில் கைவீசி' என்ற தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள்.


ஆகஸ்ட் 10, திங்கட்கிழமை...

பேராசிரியர் ம. இராசேந்திரன் 'அகர முதல...' என்ற தலைப்பிலும், கவிஞர் ஈரோடு தமிழன்பன் 'எதுபோல என்று சொல்லலாம்?' என்ற தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள்.


ஆகஸ்ட் 11, செவ்வாய்கிழமை... முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் நிறைவுப் பேருரையுடன் விழா நிறைவு பெறுகிறது.


பதிவர்கள் கலந்துகொண்டு அனுபவங்களை இடுகையிட வேண்டுகிறேன்.

9 comments:

ஈரோடு கதிர் said...

நன்றி அன்புமணி...

நிகழ்காலத்தில்... said...

சென்ற முறை நடந்தபோது கலந்து கொண்டேன்.

இந்த முறையும் முயற்சிக்கிறேன்

தகவலுக்கு மிகவும் நன்றி

குடந்தை அன்புமணி said...

வருகைக்கு மிக்க நன்றி...

கதிர்
நிகழ்காலத்தில்...

ஆ.ஞானசேகரன் said...

என்னால் கலந்துகொள்ள முடியாதது வருத்தமே... நல்ல தகவல் நண்பா

குடந்தை அன்புமணி said...

//ஆ.ஞானசேகரன் said...
என்னால் கலந்துகொள்ள முடியாதது வருத்தமே... நல்ல தகவல் நண்பா//

என்னாலும் கலந்து கொள்ள முடியாது. அதனால்தான் ஈரோடு பதிவர்கள் கலந்து கொள்ள வேண்டி இவ்விடுகை...

முனைவர் இரா.குணசீலன் said...

பேராசிரியர் ஞானசம்பந்தன் 'கற்பனவும் இனி அமையும்' என்ற தலைப்பிலும், வழக்கறிஞர் சுமதி 'நேய அருள் மெய் அன்றோ?' என்ற தலைப்பிலும் சிறப்புரை வழங்குகிறார்கள்./

இருவரின் பேச்சும் கேட்டு மகிழும் வாய்ப்பு எனக்கு அமைந்தது..
மிகவும் ஆழமான பயனுள்ள, சிந்திக்க வைத்த சொற்பொழிவுகள்.....

துபாய் ராஜா said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

குடந்தை அன்புமணி said...

முனைவர் குணசீலன் அவர்களே அந்த அனுபவத்தை இடுகையிட்டால் மகிழ்வேன்.

குடந்தை அன்புமணி said...

//துபாய் ராஜா said...
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்//

தங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பா.