Tuesday, August 25, 2009

அய்க்கூ கவிதைகள்

கிழிந்த புடவை
மறைத்து கட்டும் அம்மா
பாவம் தாவணிப்பெண்.

•••••••••••••••••

வேலிகள் தாண்டி
மேயப் பார்க்கின்றன
விழிகள்.

••••••••••••••••••

வரதட்சணை கொடுத்த அப்பா
மகிழ்ச்சியில் திளைத்தார்
கையில் பேத்தி
••••••••••••••
படிச்சிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். இலக்கியா, தகவல் மலர் வலைத்தளத்திற்கும் வருகை தாருங்கள்.

20 comments:

ஈரோடு கதிர் said...

அய்ய்ய்ய்ய்ய்ய்

சூப்பரா இருக்கு....
அதுவும் அந்த பேத்தி கவிதை

குடந்தை அன்புமணி said...

//கதிர் - ஈரோடு said...
அய்ய்ய்ய்ய்ய்ய்

சூப்பரா இருக்கு....
அதுவும் அந்த பேத்தி கவிதை//

வாங்க கதிர். ரொம்ப நன்றி.

பழமைபேசி said...

நேரம் செலவிட்டு இடுகை
இட்டார் குடந்தை அன்புமணி,
இரசித்து மகிழ்ந்தான் வாசகன்!

குடந்தை அன்புமணி said...

//பழமைபேசி said...
நேரம் செலவிட்டு இடுகை
இட்டார் குடந்தை அன்புமணி,
இரசித்து மகிழ்ந்தான் வாசகன்!//

வாங்க பழமைபேசி அண்ணா. மிக்க நன்றி... தங்கள் வருகைக்கு...

ஆ.சுதா said...

மூன்றுமே நல்லா இருக்கு அன்புமணி.
கடைசி இரண்டும் இன்னும் அருமை!

Anonymous said...

கவிதைகள் இல்லை அன்பு இவை நல்ல சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் அழகாய் வகுத்து அளித்து இருக்கீங்க..

அ.மு.செய்யது said...

எல்லாமே நல்லாயிருக்கு !!! இதைப்படித்தவுடன் எனக்கும் சில கவிதைகள் நினைவுக்கு வருகின்றன.

1.கறுப்பு வளையல் கையொருத்தி
குனிந்து வளைந்து பெருக்கி போனாள்
வாசல் சுத்தமாச்சு.
மனசு குப்பையாச்சு.

2.கண்கள் பார்த்து பேசும்போதெல்லாம்
முகத்தில் அறைவதாய்ப் படும்
மாறாப்பு சரிசெய்தல்கள்.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

அருமை! இனிமை!!

sakthi said...

வேலிகள் தாண்டி
மேயப் பார்க்கின்றன
விழிகள்.

அருமை

அப்துல்மாலிக் said...

வேலி தாண்டிய விழிகள் அருமை தல‌

தொடருங்க‌

எம்.எம்.அப்துல்லா said...

அழகு :)

ஆ.ஞானசேகரன் said...

மூன்றுமே அழகு...

Deepan Mahendran said...

மூன்றுமே நல்லா இருக்கு....!!!

தேவன் மாயம் said...

கவிதைகள் அழகு !பேத்தி கவிதை இன்னும் அருமை!

ஹேமா said...

மணி,குட்டிக் கவிதைகள் நல்லாயிருக்கு.

குடந்தை அன்புமணி said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
மூன்றுமே நல்லா இருக்கு அன்புமணி.
கடைசி இரண்டும் இன்னும் அருமை!//

மிக்க நன்றி.

குடந்தை அன்புமணி said...

//தமிழரசி said...
கவிதைகள் இல்லை அன்பு இவை நல்ல சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் அழகாய் வகுத்து அளித்து இருக்கீங்க..//

உங்களைவிடவா...

குடந்தை அன்புமணி said...

//அ.மு.செய்யது said...
எல்லாமே நல்லாயிருக்கு !!! இதைப்படித்தவுடன் எனக்கும் சில கவிதைகள் நினைவுக்கு வருகின்றன.

1.கறுப்பு வளையல் கையொருத்தி
குனிந்து வளைந்து பெருக்கி போனாள்
வாசல் சுத்தமாச்சு.
மனசு குப்பையாச்சு.

2.கண்கள் பார்த்து பேசும்போதெல்லாம்
முகத்தில் அறைவதாய்ப் படும்
மாறாப்பு சரிசெய்தல்கள்//

நீங்கள் குறிப்பிட்ட இரண்டும் நானும் படித்திருக்கிறேன். நல்ல கவிதை.

குடந்தை அன்புமணி said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார்
சக்தி
அபுஅஃப்ஸர்
எம்.எம்.அப்துல்லா
ஞானசேகரன்
சிவன்
தேன்மாயம்
ஹேமா

Thenammai Lakshmanan said...

குடந்தை அன்புமணி உங்கள் வலைத்தலம் பயனுள்ளதாக இருக்கிறது
அனைத்துக் கவிஞர்களையும் ஊக்குவிக்கின்றீர்கள்
தொடர்க உங்கள் பணி