Tuesday, September 8, 2009

படித்ததில் பிடித்த அய்க்கூ



அலுவலகம் போகும் பெண்
நகம் வளர்க்கிறாள்
கூட்டமாகவே பேருந்து
- நாணற்காடன் (செ.பே - 9942714307)

போதைவஸ்து கசக்குகிறான்
உள்ளஙகையில் தேய்கிறது
ஆயுள்ரேகை
- ராமலிங்கம் (செ.பே.எண்- 9842277982)


நீ என்பது தனிமை
நான் என்பது முன்னிலை
நாம் என்பது படர்க்கை!
- ஞானசேகரன் (செ.பே.எண்- 9842579597)

26 comments:

அன்புடன் நான் said...

அய்க்கூ மிக அருமை. ரசிக்கும்படி இருந்தது.

ஈரோடு கதிர் said...

முதல் இரண்டு கவிதை...
அருமை

பழமைபேசி said...

//படர்கை//

படர்க்கை

குடந்தை அன்புமணி said...

// சி. கருணாகரசு said...
அய்க்கூ மிக அருமை. ரசிக்கும்படி இருந்தது.//

வருகைக்கு மிக்க நன்றி தோழரே...

குடந்தை அன்புமணி said...

//கதிர் - ஈரோடு said...
முதல் இரண்டு கவிதை...
அருமை//

மூன்றாவது இலக்கண வாசம் வீசுகிறது நண்பா...

குடந்தை அன்புமணி said...

//பழமைபேசி said...
//படர்கை//

படர்க்கை//

மாற்றிவிட்டேன். அது என் தவறுதான். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

அன்புடன் அருணா said...

ஹைய்யா....அய்க்கூ நல்லாருக்கு!

அப்துல்மாலிக் said...

ஹய்யகோ ஃபோன் நம்பரெல்லாம் கொடுத்திருக்கீங்க ஆட்டோ வந்துடப்போகுது

ஹேமா said...

எல்லாமே சிக்கனமாய் கருத்தோடு.அருமை.

ப்ரியமுடன் வசந்த் said...

//போதைவஸ்து கசக்குகிறான்
உள்ளஙகையில் தேய்கிறது
ஆயுள்ரேகை//

ரசித்தேன்....

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் ரசிக்கும் படியாக இருக்கு நண்பா

குடந்தை அன்புமணி said...

//அன்புடன் அருணா said...
ஹைய்யா....அய்க்கூ நல்லாருக்கு!//

வருகைக்கு மிக்க நன்றி தோழி.

குடந்தை அன்புமணி said...

//அபுஅஃப்ஸர் said...
ஹய்யகோ ஃபோன் நம்பரெல்லாம் கொடுத்திருக்கீங்க ஆட்டோ வந்துடப்போகுது//

அவ்வளவு டெரராவா இருக்கு...

குடந்தை அன்புமணி said...

//ஹேமா said...
எல்லாமே சிக்கனமாய் கருத்தோடு.அருமை.//

கவிதையை படித்ததும் விரியும் கருத்துக்களில் சிக்கனமே இல்லை தோழி... சரிதானே...

குடந்தை அன்புமணி said...

//பிரியமுடன்...வசந்த் said...
//போதைவஸ்து கசக்குகிறான்
உள்ளஙகையில் தேய்கிறது
ஆயுள்ரேகை//

ரசித்தேன்...//

ரசனைக்குரியதை பகிர்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே...

குடந்தை அன்புமணி said...

//ஆ.ஞானசேகரன் said...
ம்ம்ம் ரசிக்கும் படியாக இருக்கு நண்பா//

நீங்கள் எல்லாம் ரசிப்பதற்காகவே படித்தை பகிர்ந்து கொண்டேன். இது தொடரும்...

Anonymous said...

KAVITHAIGAL NALLA ERUKU UNGAL NANBARGALIDAM SOLLIDUNGA ...

குடந்தை அன்புமணி said...

//தமிழரசி said...
KAVITHAIGAL NALLA ERUKU UNGAL NANBARGALIDAM SOLLIDUNGA ...//

நிச்சயமா சொல்றேன். வருகைக்கு நன்றி தமிழ்.

எம்.எம்.அப்துல்லா said...

அழகான ஹைக்கூகள். பகிர்வுக்கு நன்றிண்ணா.

குடந்தை அன்புமணி said...

//எம்.எம்.அப்துல்லா said...
அழகான ஹைக்கூகள். பகிர்வுக்கு நன்றிண்ணா.//

தங்கள் வருகைக்கும் நன்றிங்கண்ணா...

"உழவன்" "Uzhavan" said...

எல்லாமே நல்லாருக்கு நண்பா.
 
ஆண்களுக்கு இடது கை ரேகையைத்தான் பார்ப்பார்கள் என் எண்ணுகிறேன். ஒருவேளை வலது கையில் வைத்து தேய்த்தால்???? :-)
(சும்மா லொள்ளுக்குதான் கேக்குறேன்)

குடந்தை அன்புமணி said...

//" உழவன் " " Uzhavan " said...
எல்லாமே நல்லாருக்கு நண்பா.

ஆண்களுக்கு இடது கை ரேகையைத்தான் பார்ப்பார்கள் என் எண்ணுகிறேன். ஒருவேளை வலது கையில் வைத்து தேய்த்தால்???? :-)
(சும்மா லொள்ளுக்குதான் கேக்குறேன்)//

கருத்து சொன்ன கேட்டுக்கணும் ஆராயக்கூடாது... (இது ஒரு படத்தில் கமல் சொல்வார்... சும்மா நானும் ஒரு தகவலுக்குத்தான்... அவ்வவ்வேவே....

பழமைபேசி said...

//குடந்தை அன்புமணி said...
//எம்.எம்.அப்துல்லா said...
அழகான ஹைக்கூகள். பகிர்வுக்கு நன்றிண்ணா.//

தங்கள் வருகைக்கும் நன்றிங்கண்ணா
//

ரெண்டு பேரும், உக்காந்து பேசி ஒரு முடிவுக்கு வாங்க!

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

மூன்றும் நல்ல கவிதைகள். சமூக கருத்துகளுடன் இருக்கும் கவிதைகள் அதுவும் ஹைக்கூ கவிதைகள் கொஞ்சம் குறைந்துள்ள சூழலில் உங்கள் கவிதைகள் நல்ல வரவு.

கௌதமன் said...

மூன்றும் நன்றாக, வித்தியாசமாக உள்ளன. நன்று.

Unknown said...

நண்பரே உங்கள் இடுகையின் கீழே இருக்கும் தமிழ்99 இணையவிசைப்பலகையை என்னுடைய வலைப்பதிவிலும் இணைக்க விரும்புகிறேன். உதவுவீர்களா!?