Sunday, July 11, 2010

மண்வாசனைக் கவிதை

செவக்காடு உழுது
சீராக பாத்திகட்டி
கமலைத் தண்ணி எரச்சி
கடலைப் பயிறு
போட்டுவிட்டேன்...

தேனி சந்தையிலே
தேடி வாங்கிவந்து
தெக்காட்டு வயலிலே
தென்னங்கன்னு
நட்டு வச்சேன்...

அத்தை மக
ஒன்நெனப்பை
மனசுக்குள்ளே
ஊனி வச்சேன்...

கடலையும் பூத்து
காய்ப்புக்கு வந்துருச்சு...

கன்னு மரமாகி
கொலை கொலையா தள்ளிருச்சு...

நெஞ்சுக்குள்ளே
ஊனிவச்ச
ஒன் நெனப்பு விதை
மட்டும் தாண்டி
வேர்ப்புழு விழுந்து
வெட்டியா காய்ஞ்சிருச்சு...

- சங்கர பாண்டியன், (9952895010)
வடுகப்பட்டி.

நன்றி- ராகா குறுஞ்செய்தி கவிதை இதழ் (9786098440)

செவக்காடு- செம்மண் வயல்
கமலைத்தண்ணி- கிணற்று தண்ணீர்


8 comments:

VELU.G said...

ரொம்ப நல்லாயிருக்குங்க, மிகவும் ரசித்தேன்

குடந்தை அன்புமணி said...

Delete Comment From: கவிதைகுரல்
குடந்தை அன்புமணி said...
//VELU.G said...
ரொம்ப நல்லாயிருக்குங்க, மிகவும் ரசித்தேன்//

உங்களைப் போலவே நானும் அந்த கவிதையை ரசித்தேன். அதனால்தான் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

ஹேமா said...

நல்லதொரு கிராமத்து வாசனை மணக்கும் கவிதை.எல்லவற்றையும் கவனித்த நீங்கள் காதலைக் கருக்கிவிட்டீர்களே !

க.பாலாசி said...

இந்த புழுதி வாசனை மனதில் அப்பிக்கொண்டுள்ளது.. நல்ல பகிர்வு... நன்றி...

அன்புடன் நான் said...

கிராம மனம் வீசும் கவிதை....
மிக யதார்த்தம்... பாராட்டுக்கள்.

sury siva said...

எங்கேயோ உங்கள் பின்னூட்டம் கண்டு, உங்கள் வலைக்கு வந்து பார்த்தால், நீங்களும்
என்னைப்போல் ஒரு தஞ்சாவூரான். அடடா !! சென்னையிலே ஒரு தஞ்சாவூர்காரன்
இன்னொரு தஞ்சாவூரைப்பார்த்த உடன் எத்தனை மகிழ்ச்சி.!!

படித்துப்பார்த்தால், தஞ்சை கிராமங்களுக்கே உண்டான வனப்பும், சிறப்பும் செழிப்பும்
உங்கள் கவிதையிலே கண்டேன்.
முதியவனான எனக்கு, தமிழ் வலையுலகத்திலே நான் காணும் கவிதைகளுக்கு மெட்டு அமைத்து
எனது வலையிலெ போட்டு மகிழ்வேன். வணிக நோக்கு எதுவும் இல்லை.
உங்கள் கவிதை ஒரு கிராமீய மெட்டுக்கு மிகவும் நன்றாக அமைந்திருக்கிறது.
தங்களின் அனுமதியை எதிர்பார்த்து இன்னும் சற்று நேரத்தில் யூ ட்யூபில் போடுகிறேன்.
என் வலையிலும் காணலாம்/கேட்கலாம்.
மிகவும் வயதானகாரணத்தினால், என் குரல் அந்த காலம் போல், இருக்காது.
இருப்பினும் பாடி மகிழ்ந்தேன்.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

sury siva said...

http://www.youtube.com/watch?v=FUYwiO9Hzh4

பாட்டை இங்கே படிக்கிறோம்ல
வந்து கேட்டுகிட்டு போங்க..
நல்லா இல்லைன்னா சொல்லுங்க...
எரேஸ் பண்ணிகிட்டு ஓடிப்போயிடறேன்.

சுப்பு தாத்தா.

Anonymous said...

நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு