எல்லா கதவுகளையும்
மூடியபோது
நீ வந்தாய்...
சாளரங்களையாவது
திறக்கும்படி மன்றாடினாய்...
நான்
புகைக்கூண்டுகளையும்
அடைத்துவிட்டு வந்தேன்...
காத்திருப்பு காலங்கள்
வலி மிகுந்தது தோழி...
அப்போது,
சூரிய வெப்பங்கள்...
நெருப்பு சாட்டைகளால்
விளாசிப்போகும்...
மௌன உதடுகள்
விரிசல் கோட்டை
வேகமாக கிழிக்கும்...
தேவையா தோழி
அந்த காத்திருப்பு?
அதனால்தான் இந்த கதவடைப்பு
காரியங்கள்...
மெல்ல கதவிடுக்கின் வழியே
நோக்கினேன்...
வெளியேறிக் கொண்டிருந்தாய்...
இப்போது
நட்சத்திரங்கள் முறைத்தன.
அது உன் கண்களைப் போல தெரிந்தது!
- சூரியநிலா (9789507810)
பேரவை விழாக்களும் நானும்
11 hours ago
4 comments:
kathu iruthal kodumaiye athai vida kodumai mudivu theriyamal kathu iruthal valiai appadiye vadithu irukirergal mani,,,,,
அப்போது,
சூரிய வெப்பங்கள்...
நெருப்பு சாட்டைகளால்
விளாசிப்போகும்...
மௌன உதடுகள்
விரிசல் கோட்டை
வேகமாக கிழிக்கும்...
arumai intha varigal
கவிதை மிக நன்றாக இருக்கிறது!
நிலவு என்றேன் உன்னை
என் வானம் என்பதற்காக
எப்போதும் தேய்பிறையாகிறாய்
- GV Thasan
//மிக அருமையான கவிதை
தனிமையின் நிலை
காத்திருத்தலின் வலி
இயல்பாக சொல்லியிருக்கிறீர்கல்//
Post a Comment