பூக்களின் காதில்
ரகசியம் சொல்லி
வெகுமதியாய்
தேன்துளி வாங்கும்
வண்ணத்துப்பூச்சி!
- மித்ரா
**********************
என் கவிதைகளில்
காதலை விதைக்கத் துணிவின்றி
மொத்த விதைகளையும்
சேமித்துக் கொண்டிருக்கிறேன்
மௌன குகைக்குள்...
சுற்றங்களின் சந்தேகம்
என் மேல் முளைத்துவிடும் என்ற அச்சத்தில்!
- ரம்யா
*********************
தேவதைகளை சந்திக்கவே
அவரவர் தவமிருக்கையில்
எனக்கு மட்டும் அதை
பரிசாக கொடுத்தது
காதல்!
- முத்து ஆனந்த்
*******************
பெற்றவர் காப்பகத்தில்
காக்கைக்கு
கைப்பிடிச் சோறு
- தம்பி
இது நான் ரசித்த கவிதைகள். உங்கள் பார்வைக்காக....
சொந்தப் பயணத்தை அரவணைப்பவர்கள்
6 hours ago
12 comments:
சூப்பர் கலக்சன்! உங்க கவிதை படித்து நாளாகிவிட்டது.. எப்போ?
அன்புமணி ! வருக! கவிதைகள் அழகு!
நச்னு இருக்கு எல்லாமுமே!!
\\எஸ்.ஏ.சரவணக்குமார் said...
சூப்பர் கலக்சன்! உங்க கவிதை படித்து நாளாகிவிட்டது.. எப்போ?\\
ஆமா சரவணன்... வேலைப்பளு... சீக்கிரம் எழுதுகிறேன்.
\\தேவன் மாயம் said...
அன்புமணி ! வருக! கவிதைகள் அழகு!\\
நன்றி தேவா சார். படைத்தவர்களுக்கு சமர்ப்பணம்...
\\sridar57 said...
நச்னு இருக்கு எல்லாமுமே!!\\
மிக்க நன்றி ஸ்ரீதர்.
அனைத்து
கவிதைகளும்
அழகு.
கி.சார்லஸ்
www.haikukudil.blogspot.com
அனைத்து
கவிதைகளும்
அழகு.
கி.சார்லஸ்
www.haikukudil.blogspot.com
எல்லாக் கவிதைகளுமே நன்றாக உள்ளன
வருகை தந்து கருத்ரை கூறிய அனைவருக்கும் நன்றி.
தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...
வணக்கம் அழகிய கவிதைத் தொகுப்புகளை
வழங்கிவரும் தங்களுக்கு எனது மனமார்ந்த
நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!.......
Post a Comment