தமிழ்நாட்டில் மட்டும் லஞ்ச, ஊழல்களுக்கு எதிராக 200 மேற்பட்ட இயக்கங்கள் இருக்கின்றன. ஆனால் பல இயக்கங்கள் அவர்களுக்கு வரும் அச்சுறுத்தல் காரணமாக செயல்படவில்லை என்பதே உண்மை.
2007 ஆம் ஆண்டில் மட்டும் 133 லஞ்ச, ஊழல் வழக்குகள் போடப்பட்டுள்ளனவாம். 2008ல் 226 வழங்குகள். ஆண்டுக்கு ஆண்டு வழக்குகள் அதிகரித்துவருகின்றன.
இதைப் மேம்போக்காகப் பார்க்கும்போது லஞ்ச, ஊழல் அதிகரித்து வருகிறார்போல் தோன்றுகிறது. ஆனால் மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வருவதால்தான் அதிக வழக்குகளும் அதிகரித்துள்ளன என்பது நிதர்சனமாகும்.
இந்திய அளவில் லஞ்ச பெறுவதில் நெம்பர் ஒண்ணாக இருப்பது பீகார் மாநிலமாம். நமது தமிழ்நாடு ஒன்பதாவது இடத்தில் உள்ளதாம். மாநில அரசு துறைகளில் முன்னணி வகிப்பது வருவாய்துறையாம். அதற்கடுத்து போக்குவரத்து துறை, பத்திரப்பதிவுத்துறை... இப்படி போகிறதாம். பொதுமக்களின் நண்பன் என்று சொல்-க் கொள்ளும் காவல்துறை ஏழாம் இடத்தைப் பிடித்திருக்கிறதாம். இப்போதெல்லாம் நூறு, இருநூறு என்பதெல்லாம் மலையேறிவிட்டன. லட்சக்கணக்கில் லஞ்சம் பெரும் நிலை உண்டாகிவிட்டது.
சென்னை நகரங்களில் சில குறிப்பிட்ட காவல் நிலையங்களில் பணியாற்ற பயங்கரப் போட்டியே நடைபெறுகிறதாம். எல்லாம் மாமுலான விஷயங்களுக்குத்தான் என்கிறது தகவல் வட்டாரம்.
லஞ்சத்திற்கு எதிராக போராடும் அனைத்து அமைப்புகளும் ஒன்றாக இணைந்து ஒரே கூட்டமைப்பாகப் போராட வேண்டும் என்று மத்திய ஊழல் கண்காணிப்பு முன்னால் கமிஷனர் என்.விட்டல் கூறியிருந்தார். அதைக்கவனத்தில் கொண்டு
இந்திய ஊழல் ஒழிப்புபோர் கூட்டமைப்பு (அலுவலகம் 55, ரயில்வே பார்டர் ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை-33)
'மாறுங்கள் மாற்றுங்கள்' என்ற தலைப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு வரும் 19.2.2009 அன்று பயிற்சி வழங்க உள்ளார்கள். இதுபற்றிய மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும். தொலை பேசி எண்கள்:
64569900, 9710979797)
லஞ்சம், ஊழலை ஒழிக்க தகவல் அறியும் உரிமை சட்டம் மிகுந்த பலனளிக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள். இச்சட்டத்தின்மூலம் அரசின் திட்டங்கள் பற்றிய விவரங்கள் வெளிப்படையாக தெரியவரும்போது லஞ்சத்தின் வீரியம் குறையும். ஆனாலும் மத்தியில் 18 துறைகளை பற்றி நாம் கேள்வி ஏதும் கேட்க முடியாது என்று அறிவித்திருக்கிறது. இதுவே தமிழ்நாட்டில் 33 துறைகள் என்றிருக்கிறது. இவற்றை குறைத்தால் லஞ்சம், ஊழலும் குறையும் வாய்ப்பு அதிகரிக்கும்.
எல்லாவற்றையும்விட பொதுமக்களின் விழிப்புணர்வு அதிகரிப்பதுதான் விடியலுக்கான முதற்படியாக இருக்கும். லஞ்சமில்லா நாளைய உலகம் நம் கையில்!