Monday, February 2, 2009

லஞ்சத்தை ஒழிக்க த.அ.உ.சதமிழ்நாட்டில் மட்டும் லஞ்ச, ஊழல்களுக்கு எதிராக 200 மேற்பட்ட இயக்கங்கள் இருக்கின்றன. ஆனால் பல இயக்கங்கள் அவர்களுக்கு வரும் அச்சுறுத்தல் காரணமாக செயல்படவில்லை என்பதே உண்மை.
2007 ஆம் ஆண்டில் மட்டும் 133 லஞ்ச, ஊழல் வழக்குகள் போடப்பட்டுள்ளனவாம். 2008ல் 226 வழங்குகள். ஆண்டுக்கு ஆண்டு வழக்குகள் அதிகரித்துவருகின்றன.
இதைப் மேம்போக்காகப் பார்க்கும்போது லஞ்ச, ஊழல் அதிகரித்து வருகிறார்போல் தோன்றுகிறது. ஆனால் மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வருவதால்தான் அதிக வழக்குகளும் அதிகரித்துள்ளன என்பது நிதர்சனமாகும்.
இந்திய அளவில் லஞ்ச பெறுவதில் நெம்பர் ஒண்ணாக இருப்பது பீகார் மாநிலமாம். நமது தமிழ்நாடு ஒன்பதாவது இடத்தில் உள்ளதாம். மாநில அரசு துறைகளில் முன்னணி வகிப்பது வருவாய்துறையாம். அதற்கடுத்து போக்குவரத்து துறை, பத்திரப்பதிவுத்துறை... இப்படி போகிறதாம். பொதுமக்களின் நண்பன் என்று சொல்-க் கொள்ளும் காவல்துறை ஏழாம் இடத்தைப் பிடித்திருக்கிறதாம். இப்போதெல்லாம் நூறு, இருநூறு என்பதெல்லாம் மலையேறிவிட்டன. லட்சக்கணக்கில் லஞ்சம் பெரும் நிலை உண்டாகிவிட்டது.
சென்னை நகரங்களில் சில குறிப்பிட்ட காவல் நிலையங்களில் பணியாற்ற பயங்கரப் போட்டியே நடைபெறுகிறதாம். எல்லாம் மாமுலான விஷயங்களுக்குத்தான் என்கிறது தகவல் வட்டாரம்.
லஞ்சத்திற்கு எதிராக போராடும் அனைத்து அமைப்புகளும் ஒன்றாக இணைந்து ஒரே கூட்டமைப்பாகப் போராட வேண்டும் என்று மத்திய ஊழல் கண்காணிப்பு முன்னால் கமிஷனர் என்.விட்டல் கூறியிருந்தார். அதைக்கவனத்தில் கொண்டு இந்திய ஊழல் ஒழிப்புபோர் கூட்டமைப்பு (அலுவலகம் 55, ரயில்வே பார்டர் ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை-33) 'மாறுங்கள் மாற்றுங்கள்' என்ற தலைப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு வரும் 19.2.2009 அன்று பயிற்சி வழங்க உள்ளார்கள். இதுபற்றிய மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும். தொலை பேசி எண்கள்: 64569900, 9710979797)
லஞ்சம், ஊழலை ஒழிக்க தகவல் அறியும் உரிமை சட்டம் மிகுந்த பலனளிக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள். இச்சட்டத்தின்மூலம் அரசின் திட்டங்கள் பற்றிய விவரங்கள் வெளிப்படையாக தெரியவரும்போது லஞ்சத்தின் வீரியம் குறையும். ஆனாலும் மத்தியில் 18 துறைகளை பற்றி நாம் கேள்வி ஏதும் கேட்க முடியாது என்று அறிவித்திருக்கிறது. இதுவே தமிழ்நாட்டில் 33 துறைகள் என்றிருக்கிறது. இவற்றை குறைத்தால் லஞ்சம், ஊழலும் குறையும் வாய்ப்பு அதிகரிக்கும்.
எல்லாவற்றையும்விட பொதுமக்களின் விழிப்புணர்வு அதிகரிப்பதுதான் விடியலுக்கான முதற்படியாக இருக்கும். லஞ்சமில்லா நாளைய உலகம் நம் கையில்!

5 comments:

வண்ணத்துபூச்சியார் said...

DECEMBER 24 / 2008

லஞ்சம் வாங்கி பிடிபட்ட சென்னை துறைமுக டாக்டரின் வங்கி லாக்கரை சோதனையிட்ட போலீஸார் அதில் ரூ. 66 லட்சம் பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை துறைமுகத்தில் சுகாதார அதிகாரியாக வேலை பார்த்த டாக்டர் சாய்ராம் பாபு என்பவர் லஞ்ச ஊழல் புகாரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது வீட்டை சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டபோது,
மூன்று வங்கிகளில் லாக்கர் வைத்திருந்தது தெரியவந்தது.

அவரது வங்கி சேமிப்பு கணக்கில் ரூ.1 கோடியே 4 லட்சம் போடப்பட்டிருந்தது. ரூ.11 லட்சம் சேமிப்பு கணக்கு அவரது மனைவி ரமணி, மகன் கணேஷ், மகள் பிரியங்கா ஆகியோர் பெயரில் இருந்தன. கிஸான் விகாஸ் பத்திரமும் ரூ.4 லட்சத்துக்கு வாங்கப்பட்டது கண்டறியப்பட்டது

================================================

DECEMBER 24 / 2008

துப்பாக்கி லைசென்ஸ் உரிமம் வழங்க லஞ்சம் பெற்ற கரூர் ஆர்டிஓவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், ஆத்தூர் பெரியவடுகபட்டியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (42). இவர் கரூரில் டெக்ஸ்டைல் மில் நடத்தி வருகிறார். வியாபாரம் விஷயமாக இவர் அடிக்கடி வெளி மாநிலங்களுக்கு சென்று வருவார்.

இவர் தற்பாதுகாப்புக்காக துப்பாக்கி உரிமம் பெற்றிருந்தார். துப்பாக்கி உரிமம் காலாவதியான நிலையில் அதை புதுப்பித்து தருமாறு கரூர் ஆர்டிஒ அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் துப்பாக்கி உரிமம் புதுப்பிக்கபடவில்லை.

இந் நிலையில் இவர் கரூர் ஆர்டிஓ ஜவஹர் சாந்தகுமாரை நேரில் சந்தித்து விளக்கம் பெற சென்றார். அப்போது துப்பாக்கி லைசென்ஸ் உரிமம் புதுப்பித்துத் தர ரூ.6000 லஞ்சம் தர வேண்டும் என்று ஆர்டிஓவின் உதவியாளர் கூறியுள்ளார்.


லஞ்சம் தர விரும்பாத செல்வகுமார் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணம் ரூ.6,000யைஐ செல்வகுமாரிடம் கொடுத்தனுப்பினர்.

செல்வகுமார் லஞ்ச பணத்தை கரூர் ஆர்டிஒவிடம் கொடுத்த போது அருகில் மறைந்திருந்த திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் கரூர் ஜவஹர் சாந்தகுமாரை கையும் களவுமாக கைது செய்தனர்.

=================================================================

DECEMBER 20 / 2008

சென்னையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி, அவரிடமிருந்து ரூ. 25 லட்சம் பணத்தை பறித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்

==============================================================

DECMBER 21 / 2008

திருமண உதவித் திட்டத்தின் கீழ் உதவி வழங்க ரூ. 1000 லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார்.

காஞ்சீபுரத்தை அடுத்த புதேரிபண்டை கிராமத்தை சேர்ந்தவர் பாஞ்சாலி. இவரது மகள் செல்விக்கு 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இதனையொட்டி திருமண நிதி உதவி கோரி பாஞ்சாலி ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக நலத்துறை உதவியாளர் சிவகாமி என்பவரிடம் மனு கொடுத்தார். அப்போது ரூ.1,000 லஞ்சம் தந்தால் தான் நிதி உதவி வழங்கப்படும் என்று கூறினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாஞ்சாலி இது பற்றி உறவினர் நடராஜனுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அவர் காஞ்சீபுரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

இதன் பேரில் லஞ்ச ஒழிப்பு கூடுதல் சூப்பிரண்டு ஜெயபால் ரசாயன கலவை தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அதிகாரி சிவகாமியிடம் அளிக்குமாறு கூறினார். அதன்படி பாஞ்சாலி நேற்று வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று ரூ.1,000 லஞ்ச பணத்தை வழங்கினார்.

அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சிவகாமியை கையும் களவுமாக பிடித்தனர். கைது செய்யப்பட்ட சிவகாமி செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

=================================================================

DECEMBER 21 / 2008

ஊனமுற்ற நோயாளியிடம் லஞ்சம் வாங்கிய நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் கைது செய்யப்பட்டார்.

மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியரும், எலும்பு முறிவு சிகிச்சை டாக்டருமான ஸ்ரீதர் நோயாளிகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது உடல் ஊனமுற்ற நோயாளிகள் பலரிடம் இருந்து பணத்தை வாங்கி தனது சூட்கேசில் போட்டுள்ளார்.

அந்த நேரத்தில் அந்த ரூமை லஞ்ச ஓழி்ப்பு போலீசார் சுற்றி வளைத்தனர். டாக்டர் ஸ்ரீதர் நோயாளிகளிடம் பணம் வாங்கும்போது அவரை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் இருந்த சூட்கேசை வாங்கினர். அப்போது அதில் 6 ஆயிரத்து 550 ரூபாய் பணம் இருந்தது.

அவற்றை லஞ்ச ஓழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதை எதிர்பார்க்காத டாக்டர் ஸ்ரீதர் செய்வதறியாது தவித்தார்.

ஊனமுற்றோர் சான்றிதழ் வழங்குவதற்காக அங்கு வந்த நோயாளிகளிடம் தலா 100 ரூபாய் வாங்கியுள்ளார்.. நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கி பிடிபட்ட டாக்டர் ஸ்ரீதர் மீது லஞ்ச ஓழிப்பு போலீசார் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

=============================================================


NANDRI: THATSTAMIL.COM

அன்புமணி said...

தங்களின் வருகைக்கு முதலில் நன்றி! லஞ்சம் பற்றிய விரிவான தகவல்களை தொகுத்து தந்தமைக்கும் நன்றி! மக்களின் விழிப்புணர்வு மேலும் விரிவடைந்தால், ஊழல் ஒழிப்பு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் 40% முதல் 50 % வரை உடனடியாக ஒழித்துவிடலாம் என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள். பார்ப்போம்!

Valaipookkal said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

செம்புலம் said...

லஞ்சம் ஒரு சமூக நோய். 500 , 1000 என லஞ்சம் வாங்கும் ஊழியரை பிடிப்பது செத்த எலி இருக்கும் அறையில் ஊதுவத்தி கொளுத்தி வைப்பது போல்தான் அமையும்.

அறை நாறாமல் இருக்க செத்த எலியை வெளியில் கொண்டு போடுவதுதான் சிறந்தது. வண்ணத்துப்பூச்சியார் சொல்வதுபோல் மேற்சொன்னவர்கள் சற்று அதிகமாக செலவு செய்து வக்கீல் முதல் நீதிபதிவரையில் கவனிப்பார்ளேயானால் அவர்கள் குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும்.

செல்வகணபதி முதல் செயா ... வரை அதுதான் நிகழ்ந்து வருகிறது.

பொதுவில் தமிழில் ஒரு பழமொழி உண்டு ' பூசணி போகிற இடம் புலம் தெரியாதாம்,
கடுகு போகுமிடம் தடியெடுத்துச்செல்வாராம் '

நமது சட்டத்தில் 5 ரூ. பிக்பாக்கட் அடித்தவனை தண்டிக்க சட்டமுண்டு. கோடிக்கணக்கில் சுருட்டியவனை தண்டிக்க சட்டமில்லை. இன்னும் சிறிது காலத்தில் ராமலிங்க ராஜூ வெளியில் வந்துவிடுவார். இதுவே நமது சட்ட அமைப்பின் சாட்சி.

அவ்வளவு ஏன்...? வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று ஐடித்துறை அமைச்சராகக்கூட வருவார். இது் நமது சனநாயக அமைப்பின் சாட்சி.

லஞ்சம் ஒழியும் என்பதும்,
புரட்சி வரும் என்பதும்,
ஏசு வருவார் என்பது போலத்தான்.

- சென்னைத்தமிழன்

அன்புமணி said...

தங்களின் கருத்தையொட்டியே சமூக நிகழ்வுகள் இருக்கின்றன, உண்மைதான். புரையோடிப் போனதை குணப்படுத்த முயற்சிகள் தொடங்கப்படுகின்றன... அதை வரவேற்போமே!