Monday, March 2, 2009

வழக்கொழிந்த சொற்கள் (மீட்பு)

வழக்கொழிந்த தமிழ்ச் சொற்கள் பற்றி பலரும் வலைதளத்தில் எழுதிவருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக மூன்றுபேரை எழுதச் சொல்லும் முறையால் பல அரியாத, அறியத்தவறிய தமிழ்ச் சொற்களை மீண்டும் நம் பார்வைக்கு கிடைக்கிறது. அந்த வகையில் என்னை எழுதச் சொன்ன நைஜீரியா ராகவன், மற்றும் தேவா அவர்களின் வேண்டுகோளின்படி எனக்கு தெரிந்த சில சொற்களை உங்களுக்காக...
ஊடல் - அன்பால் இணைந்திருந்தவர்களிடையே ஏற்படும் சிறு இடைவெளி.
கூடல் - அன்பால் இணைந்திருத்தல்.
ஊதக்காற்று - குளிர்நிறைந்த காற்று.
நிரல் - வரிசை
பஞ்சணை - பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கை.
சரடு - கிணற்றில் நீர் இறைக்க உருளும் உருளை.
சல்லடை - மாவு, அரிசி போன்ற பொருட்களை சலிக்க உபயோகப்படும் பொருள்.
அந்தி - மாலைப் பொழுது.
பஞ்சாரம் - கோழி குஞ்சு பொரித்தபிறகு அடைத்து வைக்கும் கூடை.
பத்தாயம் (குதிர்) - நெல் மணிகளை சேமித்து வைக்க பயன்படும். இது மரத்தினாலும், மண்ணாலும் செய்யப்பட்டிருக்கும்.
உவகை - மகிழ்ச்சி, இன்பம்.
அன்னம் - சோறு. இப்போதெல்லாம் 'ரைஸ்' என்றுதான் சொல்கிறார்கள். ரைஸ் என்றால் அரிசிதானே! அரிசியை அப்படியே வைத்தால் சாப்பிடுவார்களோ?

மத்து - கீரைகள் மசிய வைக்க, தயிரிலிருந்து நெய் எடுக்க பயன்படும் மரத்தாலான பொருள்.
உறைமோர் - பாலைக் காய்ச்சி ஆறிய பிறகு பழைய மோர் கொஞ்சம் அந்த பாலில் ஊற்றி தயிராக்குவார்கள். அந்த பழைய மோருக்கு உறைமோர் பாலை தயிராக உறைய வைக்கும்.
குட்டை - சிறிய அளவில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதி (குளத்தை விட சிறிய பரப்பு) கிராமப்புறங்களில் தென்னை மட்டைகளை கீற்று முடைய இதில் ஊறவைத்து பின்பு கீற்று முடைவார்கள்)இந்த மாதிரி குட்டைகளில் எருமை மாடுகள் வெயில்காலங்களில் விழுந்து கிடக்கும். நம்ம ஊர் அரசியல்வாதிகளை ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று என்று கிண்டல் செய்வோரும் உண்டு.
ஏதோ எனக்கு ஞாபகத்தில் தோன்றியவற்றை வைத்து எழுதியிருக்கிறேன். முடிந்தால் அடுத்த பதிவு போடலாம். அடுத்து மூன்று பேரை இழுத்துவிடவேண்டும்...
எனக்குத் தெரிந்தவர்கள் எல்லாரும் எழுதிவிட்டார்கள்.
ஆகவே.... இந்தப் பதிவை படிக்கும் நீங்கள் இதுவரை எழுதவில்லையென்றால், யாராக இருப்பினும் எழுத அழைக்கிறேன்.

14 comments:

தேவன் மாயம் said...

வழக்கொழிந்த தமிழ்ச் சொற்கள் பற்றி பலரும் வலைதளத்தில் எழுதிவருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக மூன்றுபேரை எழுதச் சொல்லும் முறையால் பல அரியாத, அறியத்தவறிய தமிழ்ச் சொற்களை மீண்டும் நம் பார்வைக்கு கிடைக்கிறது. அந்த வகையில் என்னை எழுதச் சொன்ன நைஜீரியா ராகவன், மற்றும் தேவா அவர்களின் வேண்டுகோளின்படி எனக்கு தெரிந்த சில சொற்களை உங்களுக்காக...///

எப்படியோ அன்புமணிய எழுத வச்சாச்சு!!!

தேவன் மாயம் said...

ஊடல் - அன்பால் இணைந்திருந்தவர்களிடையே ஏற்படும் சிறு இடைவெளி.//

ரொம்ப சின்னதோ?

தேவன் மாயம் said...

நிரல் - வரிசைபஞ்சனண - பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கை.//

இது புதுசு!!

தேவன் மாயம் said...

சரடு - கிணற்றில் நீர் இறைக்க உருளும் உருளை///

சரடு விடலியே?

தேவன் மாயம் said...

ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று என்று கிண்டல் செய்வோரும் உண்டு.//

ஆமாம் ஆமாம்!

குடந்தை அன்புமணி said...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பதிவு(க்கு) நன்று(றி)!

கிஷோர் said...

கலக்கல் அன்புமணி, நல்லா எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்

//மத்து - கீரைகள் மசிய வைக்க, தயிரிலிருந்து நெய் எடுக்க பயன்படும் மரத்தாலான பொருள்.//

எங்க வீட்டில இப்போதும் இப்படிதான் சொல்றாங்க. உங்க பக்கம்?

பழமைபேசி said...

நன்றி!

குடந்தை அன்புமணி said...

//கிஷோர் கூறியது...
கலக்கல் அன்புமணி, நல்லா எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்

//மத்து - கீரைகள் மசிய வைக்க, தயிரிலிருந்து நெய் எடுக்க பயன்படும் மரத்தாலான பொருள்.//

எங்க வீட்டில இப்போதும் இப்படிதான் சொல்றாங்க. உங்க பக்கம்?//


பலரின் வீட்டில் இப்பொருளே இல்லை. அதனால்தான் எழுதினேன்!

குடந்தை அன்புமணி said...

//பழமைபேசி கூறியது...
நன்றி!//

நீண்ட இடைவேளைக்குப் பிறகு வருகை தந்ததற்கு நன்றி!

வெற்றி said...

அருமையாக எழுதியுள்ளீர்கள் அன்புமணி.பஞ்சாரத்தை நானும் திருடிக்கொண்டேன். இது எதார்த்தமாக நடந்துள்ளது.

ரியலி சூப்பர்.

Anonymous said...

என்னையும் அழைத்துவிட்டார்கள் இஅன்னும் எழுதவில்லை

ஆ.ஞானசேகரன் said...

மறந்துவரும் சொற்களை ஞாபகபடுத்திவிட்டீர்கள்.. நன்றி