மௌனம் பூண்டு கிடந்தது
காதல்
தன்னைப் பிரிந்து சென்ற
மழைக்காதலியின்
பரிசத் தீண்டல்கள்
கிட்டாத சோகத்தில்...
தன்னின் துயர கண்ணீர்களை
பெரும் அலையென
பிரசவித்துக் கொண்டிருந்தது...
நெடும் கூந்தலொன
விரிந்துகிடக்கும்
தனது கரைகளில்
கால்நனைத்து செல்லும்
காதலர்களை
மிகுந்த ஆதங்கத்துடன்
அது எட்டிப்பார்த்து
கண்ணீர் உகுத்துகிறது...
பிறகு,
பெரும் மழையொன்று
கொட்டத் தொடங்குகிறது,
உன் விழியில்
நீர்பூக்க கண்டேன் தோழி...
ஒரு மழை நாளில்தானே
கொடும் கரமொன்று
உன்னையும் என்னையும்
பிரித்தது...?
நம்மிரு உடல்கள்
வேறு வேறு
உடல்களுக்கு உறுதி
செய்யப்பட்டது
மழை நாளொன்றில்தானே.. தோழி...
நீயும் நானும்
அதை
விழிகளிலிருந்து தருவித்து கொள்கிறோம்
அவ்வப்போது...
பெரும் கேவலுடன்..!
- சூரிய நிலா,
9789507810
பேரவை விழாக்களும் நானும்
7 hours ago
7 comments:
//
நம்மிரு உடல்கள்
வேறு வேறு
உடல்களுக்கு உறுதி
செய்யப்பட்டது
//
திருமணம் என்பதற்கு அருமையான விளக்கம் தோழர் !
கவிவரியின் குரலில் நிலா உருகி வழிகிறது மழை நாளில் !!
காதலும் ஒரு தவிப்புமாய் கவிதை கரைகிறது.நன்று.
தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நியோ
//ஹேமா said...
காதலும் ஒரு தவிப்புமாய் கவிதை கரைகிறது.நன்று.//
அதிலும் ஒரு சுகம் இருக்கத்தானே செய்கிறது... தங்கள் வருகைக்கு நன்றி தோழி...
கவிதை அருமை.
வாழ்த்துக்களுடன்..
கி.சார்லஸ்
haikukudil.blogspot.com
ckicharles@yahoo.com
கவிதை அருமை.
வாழ்த்துக்களுடன்..
கி.சார்லஸ்
haikukudil.blogspot.com
ckicharles@yahoo.com
கவிதை அருமை.
வாழ்த்துக்களுடன்..
கி.சார்லஸ்
haikukudil.blogspot.com
ckicharles@yahoo.com
Post a Comment