Sunday, February 8, 2009

பதினைந்து நாளில் ஏதாவது அதிசயம் நடந்தால்தான் உண்டு- ஈழத்தமிழரர் அகிலனின் ஏக்கம்.


பதிவர்கள் சார்பாக ஈழத்தமிழருக்காக தன்னுயிர் ஈந்த முத்துக்குமரனுக்கு அஞ்சலிக்கூட்டம் தி்ட்டமிட்டபடி சென்னை தியாகராயர் நகர், நடேசன் பூங்காவில் நடைபெற்றது. சரியான நேரத்திற்கே கூட்டம் ஆரம்பித்ததே இந்த நிகழ்வின்போதுதான் என்றபோதே நமது வலைப்பதிவர்களின் உணர்வினை புரிந்துகொள்ள முடிந்தது.
பதிவர்களின் அறிமுகத்திற்கு பிறகு ஒருவர் பேசினார்.(அனைவரின் பெயரை தவிர்க்கிறேன்.) ஈழத்தமிழருக்கான தமிழ் மக்களின் உணர்வுகளையும், பத்திரிகையாளர் சிலரின் போக்கையும் விலக்கிவிட்டு, இதற்காக நம்மால் செய்ய முடிந்தது எல்லாம் காங்கிரஸை புறக்கணிப்பதே, அதற்கு மாற்றாக பி.ஜே.பி. ஆதரிக்க வேண்டும் என்றார்.

அவர் கருத்துக்கு அனைவருமே பி.ஜே.பி.யால் மட்டும் என்ன செய்ய முடியும் என்றபோது, நமது எதிர்ப்பை காட்டத்தான் அவ்வாறு செய்யச் சொன்னேன் என்றார். மற்றபடி அனைவரும் ஒரே மாதிரிதான் அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற கருத்தே மேலாங்கியது.
வைகோ சிறப்பாக செயல்படுவதாக ஒருவர் குறிப்பிட்டபோது, அவரின் உழைப்பு விழலுக்கு இரைத்த நீராகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. காரணம், அ.தி.மு.க. கூட்டணியில் அவர் இருப்பதே. அவர் அக்கூட்டணியை விட்டு விலகி, ராமதாஸ், திருமா, தா.பாண்டியன் போன்றோர் கூட்டணி வைத்தால் நல்லது என்ற கருத்தும் பரவலாக இருந்ததை அறிய முடிந்தது.

அடுத்து பேசியவர் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து வாழ்ந்துவரும் அகிலன். அவர் ஈழ நிலையை விளக்கிய போது அவையில் கனத்த மெளனம் நிலவியது. முஸ்லிம்கள் நாளைக்கு ஐந்து தடவை தொழுகை செய்கிறார்களோ இல்லையோ, நான் ஐந்து முறை இன்டர் நெட்டுக்குச் சென்று, ஈழத்தில் வாழும் எனது அம்மா, தம்பி, தங்கைகளின் பெயர் பலியானோர் பட்டியலில் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வருகிறேன் என்றவர், முத்துக்குமரன் போன்றோர் தீக்குளிப்பது தமிழர்களுக்கு வேண்டுமானால் பெருமையாக இரு்ககலாம். ஆனால் அதனால் ஆவப்போவது என்ன என்று கேள்வி எழுப்பினார். ராஜபக்சேவின் முடிவில் அவர் தீவிரமாகவே இருப்பதாகவும், இன்னும் பத்து அல்லது பதினைந்து நாட்களில் ஒரு முடிவுக்கு வந்துவிடும் நிலையிலதான் இப்போது ஈழம் இருக்கிறது. அதற்குள் ஏதும் அதிசயம் நடந்தால்தான் உண்டு என்றபோது, அனைவரும் பேசத்திரணியற்று இருந்தனர்.

இந்திராகாந்தி,ராஜீவ் காந்தி போன்றோருக்கு செருப்பு மாலை போடப்பட்டது சம்பந்தமாக பேச்சு வந்தபோது, இதுவரை அவர்களை நாம் அனைவரும் மதித்தே வந்திருக்கிறோம். ஆனால் இன்றைய காங்கிரஸின் போக்கின்மீது உள்ள வெறுப்பின் வெளிபாடாகத்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். தவிர, அந்த தலைவர்களை அவமதிப்பதை நாமும் கண்டிக்கிறோம் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.

தொடரும் தீக்குளிப்பையும் கண்டிக்கப்பட்டது.ஈழத்தமிழருக்கா நம்மால் என்ன செய்ய முடியும் என்று விவாதிக்கப்பட்டது. பேரணி, ஆர்பாட்டம், துண்டறிக்கை வெளியிடுவது என்றெல்லாம் அலோசனைகளுக்குப் பின் ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் இருக்கமே நிலவியது.
வந்திருந்த வாசகர் ஒருவர், இலங்கைப் பிரச்சனையில் இன்னும் பலருக்கு தெளிவில்லாமலே இருப்பதாக தெரிவித்தார். உழைக்கப் போன இடத்தில் தனிநாடு கேட்கலாமா என்ற கேள்வி பலருக்கும் இருப்பதாக தெரிவித்தவர், அதைப்பற்றி பதிவு எழுதுங்கள், முத்துக்குமரனின் இறுதி அறிக்கையை அனைவருக்கும் கொண்டு சேருங்கள் என்றார். அப்போது ஒருவர்(பெங்களூர் பதிவர்) வருகிற ஞாயிறு(15.2.2009) அன்று பெங்களூரில் ஆர்பாட்டமும், துண்டறிக்கைகள் வெளியிடுவதும் செய்யப்போவதாகவும், துண்டறிக்கைகள் கன்னடம்,ஆங்கிலத்திலே இருக்குமாறு செய்யப்பட்டுள்ளது.(தமிழில் இருந்தால் கன்னடர்கள் இந்த விசயத்தில் வேறு விதமாக எண்ணக்கூடும் என்பதால்) என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, மற்ற மொழி தெரிந்தவர்களும் அந்தந்த மொழிகளில் மொழிபெயர்த்து அனைத்து மொழிமக்களிடமும் இவ்விசயத்தை கொண்டு செல்ல வேண்டுமென்று தீர்மானமாகத் தெரிவிக்கப்பட்டது.
இறுதியாக ஈழத்திற்காக தீக்குளித்த தமிழர்களுக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்ட பிறகு கனத்த இதயங்களுடன் கலைய மனமில்லாமல் ஆங்காங்கே நின்று மீண்டும் மீண்டும் பலரும் பேசிக்கொண்டிருந்தனர்.

25 comments:

ROSAVASANTH said...

//இதற்காக நம்மால் செய்ய முடிந்தது எல்லாம் காங்கிரஸை புறக்கணிப்பதே, அதற்கு மாற்றாக பி.ஜே.பி. ஆதரிக்க வேண்டும் என்றார்.//

நான் அவ்வாறு சொல்லவில்லை. பிஜேபியை விட காங்கிரஸ் மோசமானது, பிஜேபி வந்தாலும் பரவாயில்லை, காங்கிரஸ் ஒழியவேண்டும் என்றேன்; என்கிறேன்

குடந்தை அன்புமணி said...

//நான் அவ்வாறு சொல்லவில்லை. பிஜேபியை விட காங்கிரஸ் மோசமானது, பிஜேபி வந்தாலும் பரவாயில்லை, காங்கிரஸ் ஒழியவேண்டும் என்றேன்; என்கிறேன்//

தவறுக்கு வருத்தம் தெரிவித்ததுக் கொள்கிறேன் தோழரே!

Anonymous said...

காங்கிரசா அல்லது பாஜக வா என்ற உங்களது மோதலை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. அதனால்தானோ என்னவோ முத்துக்குமரன் அன்பார்ந்த பதிவர்களே என உங்களை நம்பி எழுதி வைத்துப் போகவில்லை. 15 நாள் உள்ளது எப்படி புராஜக்ட முடிக்கிறதுன்னு கேட்டா மூணு மாதம் கழித்து வரும் புராஜக்ட்ல கிழிச்சிருவேன்னு பேசுறதுக்கு வெக்கமாயில்லை.

ஓட்டுச்சீட்டு அரசியலின் மூலமாகவே ஜனநாயகம் என்றால் என்ன என்பதை அறிந்து கொண்டுள்ள உங்களையும் மக்களையும் ஜனநாயகத்திற்காக போராடுவதற்கு முத்துக்குமரனின் மரணம் பயன்பட்டிருக்க வேண்டும். ஆனால் கடிதம் படித்த உங்களுக்கோ ஜனநாயகம் பற்றி அறிவு இல்லாததால் தேர்தல் பாதையில் தீர்வு தேடுகின்றீர்கள்.

ஜனநாயகம் பற்றிய உங்களது அறிவுப் போதாமை மட்டும் காரணமல்ல. ஒரு இன உணர்வுள்ளவராக இருப்பதாக கூட வைத்துக் கொள்வோம். ஒரு நாட்டின் சுதந்திரத்திற்கான போராட்டத்தை தானே சுதந்திரமடையாத (அதாவது லீவு போட்டு ஆர்ப்பாட்டம், பேரணி நடத்த துப்பில்லாத) சில மென்பொருள் விற்பன்னர்கள் போடும் பிச்சையில் (அதாவது அவர்களுக்கு வாய்க்கும் நேரத்தில் மாத்திரம் அவர்களுக்கு பிரச்சினை சிறிதும் தோன்றாத வகையில்) அதாவது கலந்துரையாடல் மூலமாக நடப்பது வேடிக்கை இல்லையா?

If ... then loop போட்டு நட்த்த புரட்சி என்பது புரோக்கிராம் இல்லப்பா. அதப்புரிஞ்சுக்காம மெயில் அனுப்பலாம்....சினிமா விமர்சனம் எழுதாம இருக்கலாம்...கருத்தரங்கம் நடத்தலாம் னு பேசுறதக் கேட்டா சிரிப்பா வருது. என்ன பண்றது இப்படு பிளாக் எழுத வ்ந்த தமிழர்கள் எல்லாம் தங்களோட க்ம்பெனில PM/TL அளவுள இருக்கதால தாங்கள் முதலாளிக்கு போடுற சீனையே (அதாங்க எக்செல், பவர் பாயிண்ட் பிரசண்டேசன், மீட்டிங்...)இங்கயும் போட்டா எப்படி. அதெல்லாம் மீறி இப் தென் லூப் மாதிரி ஹிலாரிக்கு மெயில் அனுப்பலாம், அருந்ததி ராய எழுதச் சொல்லி மெயில் அனுப்பலாம்னு சொல்ல ... இன்னொருத்தர் சொன்னார் ஈழ்ம் அமைஞ்சா இந்தியாவுக்கு லாபம்னு மார்க்கெட்டிங் பண்ண ஏதாவது வாய்ப்பிருந்தா சொல்லுங்க ன்னாரு. என்னத்த சொல்றது பதினைஞ்சு நாள்ல புராஜக்ட முடிக்கச் சொன்ன முதலாளி நெலமய நெனச்சா பாவமாத்தான் இருக்கு. ஆனா மக்களயும் அப்பிடி பாக்காதீங்க.

வைகோ அல்லது நெடுமாறன் போன்றவர்கள் ராஜீவ் படுகொலை நடந்த போது என்ன செய்து கொண்டிருந்தார்கள். ராஜீவைக் கொலை செய்தது சரியா தப்பா என்பது பற்றிப் பேசப் படவேயில்லை. எப்படி இந்திரா ராஜீவ் போன்றவர்களை ஈழமக்களுக்கு ஆதரவானவர்களாகப் பார்க்கிறீர்கள். அமெரிக்கா உதவ வேண்டும் என்ற கோரிக்கையை கூட உங்களது வர்க்கமான நடுத்தர வர்க்கம் அலுவலகத்தில் எப்படி பிஹேவ் பண்ணுமோ அப்படியே சிந்தித்து உள்ளீர்கள்.

முதலில் உங்களிடமிருந்து முத்துக்குமரனை விடுவிக்க வேண்டியுள்ளது. முத்துக்குமரனிடமிருந்து ஈழப் பிரச்சினை துவங்கவில்லை. மக.இக ன் குடியரசு தின ஆர்ப்பாட்டத்திற்கு முந்தைய தினம் வரை போரை இந்தியாதான் நடத்துகின்றது என்பதை பழ நெடுமாறனோ வைகோ வோ, ஏன் சிபிஐ ஓ கூட சொல்லவில்லை. அந்தக் கூட்டுக்களவாணிகள்தான் இன்றைக்கு போர் நடத்தும் மத்திய அரசை போரை நிறுத்த கெஞ்சுகிறார்கள், வல்லுறவுக்கு வரும ரவுடியிடம் தன் பெண்ணுக்க திருமணம் செய்து வை எனக் கெஞ்சுவதைப் போல். இந்திராவோ ராஜீவோ ஈழத்தை பெண்டாள நினைத்த பாசிஸ்டுகள்தான் என்பதில் சந்தேகமில்லை. ஒரு விடுதலை இயக்கம் பக்கத்து நாட்டின் அதிகார வர்க்க ஆதரவோடு (ரா) விடுதலையை சாதிக்க முடியாது.

பெங்களூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அதற்கு கன்னடம் ஆங்கிலம் போன்றவற்றில் மொழிமாற்றம் செய்த முத்துக்குமரனின் அறிக்கையை அச்சிட்டுள்ளதாகவும், ஆர்ப்பாட்டம் அடுத்த ஞாயிற்றுக்கிழமை என்றும் பதிவர் ஒருவர் சொன்னார். உடனே தமிழகத்திலும் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்படும் என எதிர்பார்த்தேன். ஆனால் விவரமாக (அதாவது ஆபத்தில்லாத சுயநலத்துடன்) மற்ற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும் எனப் பேசினர்.

கடைசிவரை எந்த முடிவும் எடுக்காமல் கலைந்த இந்தக் கூட்டம் ஒரு வகையில் தமுஎச ன் கலை இரவு போல இருந்தது. சமூக அறிவு எள்ளளவும் இல்லாத அந்த இயக்கத்தை போலவே நெட்டில் ஓட்டுப போடுவதைப் பற்றி பேசியவர்கள், தனியாக வரலாறு அதாங்க ஈழ வரலாற்றை பா. ராகவன் ரேஞ்சில் படிக்க விரும்பியவர்கள் என சகிக்க முடியாத ஜீவன்களையெல்லாம் இணைத்தது அரசியல் கலக்காத் போர்நிறுத்தம் என்ற என்ஜிஓ கோரிக்கையும், இரண்டு நிமிட மவுனமும்.

பிச்சை போடுபவர்கள் பிச்சைக்காரனின் விருப்பத்தை கேட்டு பொருட்களை பிச்சையிடுவதில்லை. அதைத்தான் ஈழத்திற்கு நீங்கள் செய்கின்றீர்கள். ஜனநாயகத்திற்கான போராட்டத்தை டெஸக்ல் உட்கார்ந்து செய்ய முடியாது. வேலை இழப்போ சம்பள இழப்போ உங்களை வருத்துமென்றால் நீங்கள் விரும்பும் நேரமாகிய பொருளைப் பெறுவதற்கு ஈழம் ஒன்றும் பிச்சைக்காகப் போராடவில்லை, உரிமைக்காகப் போராடுகிறது.

குடந்தை அன்புமணி said...

தங்களின் கருத்துக்களில் இருந்து தாங்களும் அங்க வந்திருந்தது தெரிகிறது. தங்களின் கருத்தையும் அங்கு பதிந்திருக்கலாம். விவாதி்த்திருக்கலாம். ஆலேசனைகள் சொல்லி இருக்கலாம். போராட்டம் நடத்துவதற்கு எண்ணிக்கைகள் முக்கியமில்லை. நான் தயார் என்று நீங்கள் கையை உயர்த்தி இருக்கலாம். முன்உதாரணமாக இருந்திருக்கலாம். அதைவி்ட்டுவிட்டு,அங்கு மெளனம் சாதித்துவிட்டு, இங்கு வந்து உளறுவதையும், பெயர் சொல்ல விரும்பாதையும் எந்த விதத்தில் சேர்ப்பது. நல்ல தலைமை இன்றி தானே தள்ளாடுகிறது... எரிகின்ற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்பதுதானே தமிழக நிலைமை.பதினைந்து நாள் என்பது ஈழத்தில் உள்ள நிலமைதானே தவிர, போராடுவதற்கு உணர்விருந்தால் போதும். தற்சயம் என்ன செய்வது என்ற கேள்விக்கு மெளனம் சாதித்தது... நீங்களும்தானே(?!)

Anonymous said...

நண்பரே பெயர் முக்கியமில்லை. என்ன உளறுகிறேன் என்று சொன்னால் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன். தலைமையை தெரிவு செய்ய அரசியல் நிலைப்பாடு புரட்சிகர அமைப்புகளின் கீழ இருக்க வேண்டும். கருத்தை சபையின் தரம் அறிந்துதான் சொல்லவில்லை.

ஆனாலும் நண்பரே ஏன் எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது பற்றி எந்த குற்ற உணர்வும் இல்லாமல் எப்படி பேச முடிகின்றது.

குடந்தை அன்புமணி said...

எனக்கு உணர்வு மேலிட அங்கு பேசமுடியாமல் நான் தத்தளித்தது எனக்குத்தான் தெரியும். நான் இதுமாதிரி கூட்டங்களில் கலந்து கொள்வது இது இரண்டாவது தடவை. யார் எப்படி என்று எனக்கு தெரியாது. தாங்கள் ம.க.இ.க வை சேர்ந்தவர் என்று நினைக்கிறேன்? சரியா?

Anonymous said...

மன்னிக்கவும். எனது உளறல்கள் என தாங்கள் சொன்னது எதனை என அறிய விரும்புகிறேன்.

குடந்தை அன்புமணி said...

உளறல்கள் = தங்கள் கருத்து. அவரவர்களுக்கு எந்த அளவில் போராட முடியுமோ அந்த அளவில் போராடுவது தவறில்லை என்று நினைக்கிறேன். எல்லாராலும் உழவு வேலை செய்யமுடியாது இல்லையா. ஆனால் உழவுக்கு தேவையான நிலம் தரலாம், உரம் தரலாம், இன்னும்... எழுத்தும் கூட ஒருவகையில் ஒருஉதவிதானே. அந்த எழுத்து ஒருவருக்கு உணர்வினை மூட்டினால் போதும்... அந்த வகையில் நமது பிளாக் நடத்துபவர்கள் செய்கிறார்கள்.நம் தமிழர்களுக்குள் ஒற்றுமையும்,ஒருங்கிணைக்க நல்ல தலைமையும் இருந்தால் போதும். நாம் என்னதான் போராட்டங்களையும், ஆர்பாட்டங்களையும் நடத்தினாலும், இலங்கை அரசு செவிசாய்க்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத, இயலாத நிலையில்தானே நாம் இருக்கிறோம். என்ன செய்வது தோழரே...

Anonymous said...

எந்த கருத்து உளறல் ஏன் என விளக்க இயலவில்லையா ? முடிந்தால் முயற்சித்து விட்டு பதில் எழுதவும். நிற்க

உழவு போடுகின்ற இடத்தில் கதா கலாட்சேபம் செய்வது முடியாது. விவசாயி ஒரு பிச்சைக்காரன் என்ற தங்களது மனோபாவம்தான் ஈழமக்களையும் எதைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள வேண்டும் என உங்களை சிந்திக்க வைக்கிறது.

திடமான அரசியல் நிலைப்பாடு இல்லாத பட்சத்தில் ஏதாவது செய்ய அதாவது பண்ணையார்களின் மனமிரங்கிய பிச்சை போல பிளாக் எழுதுவீர்கள், ஓட்டுப் போடுவீர்கள். இதே பிரச்சினை உங்கள் வீட்டுக்கு வந்திருந்தால் என்ன செய்வீர்கள். நிச்சயம் இப்படி நடந்து கொள்ள மாட்டீர்கள்.

தற்போதைய தங்களது நிலமை சுயநலத்திற்கு உட்பட்ட பொதுநலம். இதைத்தானே கலைஞரும் செய்கிறார், வைகோ, நெடுமாறன், காங்கிர"ஸ், பிஜேபி என் அனைவரும செய்கின்றனர்

Athisha said...

அன்புமணி நிகழ்வு குறித்த பதிவிற்கு மிக்க நன்றி..

குடந்தை அன்புமணி said...

//திடமான அரசியல் நிலைப்பாடு இல்லாத பட்சத்தில் ஏதாவது செய்ய அதாவது பண்ணையார்களின் மனமிரங்கிய பிச்சை போல பிளாக் எழுதுவீர்கள், ஓட்டுப் போடுவீர்கள். இதே பிரச்சினை உங்கள் வீட்டுக்கு வந்திருந்தால் என்ன செய்வீர்கள். நிச்சயம் இப்படி நடந்து கொள்ள மாட்டீர்கள். //
நீங்க என்ன செய்தீர்கள் நண்பா?

Anonymous said...

\\ காங்கிரசா அல்லது பாஜக வா என்ற உங்களது மோதலை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. \\

இந்த மோதலில் கம்யூனிஸ்ட் என்று ஒரு கட்சி இருப்பதையே மறந்து போனதின் ஆற்றாமை உங்கள் பதிலில் தெரிகிறது தோழர்.

Athisha said...

\\
நீங்க என்ன செய்தீர்கள் நண்பா?
\\

அனாமதேயராக பின்னூட்டம் போட்டு கம்யூனிஸ்டுகளுக்கு ஆள் பிடிப்பாங்க..

குடந்தை அன்புமணி said...

//உழவு போடுகின்ற இடத்தில் கதா கலாட்சேபம் செய்வது முடியாது. விவசாயி ஒரு பிச்சைக்காரன் என்ற தங்களது மனோபாவம்தான் ஈழமக்களையும் எதைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள வேண்டும் என உங்களை சிந்திக்க வைக்கிறது. //

உங்களின் விதாண்டவாத்திற்கு என்ன பதில் சொல்ல?

Athisha said...

அனாமதேயராக பின்னூட்டம் போடுவதிலேயே தெரிகிறதே தோழர் உங்கள் புரட்சி

இணையத்தின் முகமற்றத்தன்மையில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேச இயலும்..

தாங்கள் பேசியதும் முகமூடி அணிந்து கொண்டு செய்யும் புரட்சியைப்போலத்தான் இருக்கிறது. இணையத்தில் கூட உங்களால் உங்கள் முகத்தோடு பேச இயலாத போது வீதிக்கு வந்து புரட்சி செய்ய போகிறீர்களா?

Anonymous said...

அந்த ம க இ க தோழரின் சில வாதங்கள் ஏற்புடையதாக இருந்தாலும், அவரது சில கூற்றுகள் :

1. ஜனநாயகம் பற்றிய அறிவில்லை
2. அறிவுப் போதாமை
3. ராஜீவ் கொலை சரியா தப்பா என ஏன் விவாதிக்கவில்லை
4. சமூக அறிவு எள்ளளவும் இல்லை

போன்ற வரிகள் உங்களுக்கு ஒன்றும் தெரியாது. உங்களுக்கும் சேர்த்தே நானும் சிந்திக்கிறேன் எனச் சொல்லும் ஃபாசிச மனோபாவத்தையே காட்டுகிறது.

அது சரி, புரட்சி என்பது எப்படி வருமெனப் பாடம் எடுக்கும் அவர், வலைப்பதிவர்கள் புரட்சி செய்ய வலைப்பதியவில்லை என்பதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார். 'தன்னளவில் இயன்றவரையில்' ஈழப் பிரச்சனைக்கு ஏதாவது உதவ முடியுமா எனப் பார்ப்பதே அவர்கள் நோக்கம்.

குடந்தை அன்புமணி said...

//
1. ஜனநாயகம் பற்றிய அறிவில்லை
2. அறிவுப் போதாமை
3. ராஜீவ் கொலை சரியா தப்பா என ஏன் விவாதிக்கவில்லை
4. சமூக அறிவு எள்ளளவும் இல்லை//

'கற்றது கை மண்ணளவு' நானும் ஒத்துக்கொள்கிறேன். தெரிந்ததை செய்கிறோமே என்றுதானே எண்ண வேண்டும். அந்த நல்ல மனசைதானே புரிந்து கொள்ள வேண்டும்.நிற்க! ராஜீவ் கொலை சரியா/ தவறா என்பது பற்றி விவாதிக்க நாம் கூட்டம் போடவில்லையே.

Anonymous said...

\\நீங்க என்ன செய்தீர்கள் நண்பா?\\

நீங்கள் செய்யவில்லை. நான் செய்துமுடித்துவிட்டேன் என எங்குமே சொல்லவில்லை. நான் செய்ய வேண்டிய திசைவழியைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்பதாக நினைக்கிறேன். சொந்தப் பிரச்சினைக்கு தரும் முக்கியத்துவம் பொதுப்பிரச்சினைக்கும் தர வேண்டும் என்பது நமது விழுமியமாக இருக்க வேண்டும்.

\\இந்த மோதலில் கம்யூனிஸ்ட் என்று ஒரு கட்சி இருப்பதையே மறந்து போனதின் ஆற்றாமை உங்கள் பதிலில் தெரிகிறது தோழர்\\

மன்னிக்கவும் அவர்களை போட்டியில் இருப்பவர்களாகவே யாரும் கருத முடியாதபடிதான அவர்களது மக்கள் செல்வாக்கு உள்ளது. மற்றபடி அவர்களைப் பற்றி விமர்சிக்க ஏராளம் உள்ளது. திருட்டு கபோதிங்க அவனுங்ங..

\\
நீங்க என்ன செய்தீர்கள் நண்பா?
\\

அனாமதேயராக பின்னூட்டம் போட்டு கம்யூனிஸ்டுகளுக்கு ஆள் பிடிப்பாங்க..\\

அனாமதேயராக வருவதால் ஆள்பிடித்து வீடு கட்டி குடியிருக்க விரும்பவில்லை. ஒரு கருத்து சரியா தவறா என விவாதிக்க விரும்புகிறேன். கம்யூனிசம் மூலமாக நிரந்தர தீர்வு சாத்தியம் என்றால் அதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஆனால் பதிவராக மாறும் அளவுக்கு வாய்ப்பு கிடைக்காதவர்களை பற்றிய உங்களது மதிப்பீடு பல் முன்முடிவுகளோடு உள்ளது அறிந்து வருந்துகிறேன். ஒரு கருத்து சரி என்றால் அது கம்யூனிசம் என்றால் அதற்குஆள் பிடிக்க வேண்டியதில்லை. ஆட்கள்தான் தம் விடிவுக்கு பற்றிக் கொள்ள வேண்டியது அது.

\\உங்களின் விதாண்டவாத்திற்கு என்ன பதில் சொல்ல?\\

உங்களால் இயன்றதை மாத்திரம் செய்யாமல் அதற்கும மேலே செய்ய முன்வாருங்கள் என்றார் அதற்கு பெயர் விதணடாவாதமா... நடந்து கொண்டிருப்பது 15 நாளில் வாழ்வா சாவா பிரச்சினை ... அதற்கு என்னால் இவ்வளவுதான முடியும் எனக் கூறுவது அருவெறுப்பாக இருந்தது.... உண்மையில் உங்களுக்கு அது அப்படி படவில்லையா...அங்கே உயிர், மானம் எல்லாம் போகின்றது. ஆனால் கூட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என ஒருவர் சொன்ன போது நண்பர் ஆதிஷா தான் அது சாத்தியமல்ல என 37 பேர் சார்பாகவும் அவர்களைக் கேட்காமலே ஒரு ஜனநாயகமற்ற முறையில் அவர்களது பிரதிநிதியாக பேசினார் என நினைக்கிறேன். நண்பர்தான் தற்போது வீதிக்கு வரும் வீரத்தைப் பற்றிப் பேசினார் என நினைக்கிறேன். எனக்குத் தெரிந்த வரையில் சென்னையில் எந்த அமைப்பு சரியான முழக்கங்களின் கீழ் ஆர்ப்பாட்டம் பேரணி உண்ணாவிரதம் ஈழத்திற்காக நடத்தினாலும் கடந்த இரு மாதமாக நான அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்தோ அல்லது லாஸ் ஆப் பே யிலோ சென்று விடுகிறேன். நீங்கள் அப்படு வந்திருந்தால் சந்தோஷம். அதைத் தொடரவும் மற்றவர்களையும் அதற்கு வற்புறுத்தவும் செய்யலாம். இதைப் பேசும் நமது ஐடி தரப்பும் இதற்காக போராட முன்வரலாம்.. இதைப் பேசினால் மறைந்து புரட்சி விதண்டாவாதம் என்றால் என்ன செய்வது.

\\அந்த ம க இ க தோழரின் சில வாதங்கள் ஏற்புடையதாக இருந்தாலும், அவரது சில கூற்றுகள் :

1. ஜனநாயகம் பற்றிய அறிவில்லை
2. அறிவுப் போதாமை
3. ராஜீவ் கொலை சரியா தப்பா என ஏன் விவாதிக்கவில்லை
4. சமூக அறிவு எள்ளளவும் இல்லை

போன்ற வரிகள் உங்களுக்கு ஒன்றும் தெரியாது. உங்களுக்கும் சேர்த்தே நானும் சிந்திக்கிறேன் எனச் சொல்லும் ஃபாசிச மனோபாவத்தையே காட்டுகிறது.\\



\\அது சரி, புரட்சி என்பது எப்படி வருமெனப் பாடம் எடுக்கும் அவர், வலைப்பதிவர்கள் புரட்சி செய்ய வலைப்பதியவில்லை என்பதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார். 'தன்னளவில் இயன்றவரையில்' ஈழப் பிரச்சனைக்கு ஏதாவது உதவ முடியுமா எனப் பார்ப்பதே அவர்கள் நோக்கம்.\\

உங்களுக்கு அறிவு இல்லை என நான் சொல்லவில்லை. சமூக அறிவில்லை என்பது உண்மைதான். நேற்று கூட்டத்திலிருந்தே அதற்கு நிறைய உதாரணம் தர முடியும். இதை சுட்டிக் காட்டுவதற்கு ஒருவன் பாசிஸ்டாக இருக்க வேண்டும் எனக் கருதினால் உங்களது அரசியல் ஞானமும் சந்தேக்த்திற்குரியதே... ராஜீவ் படுகொலை சரியா தப்பா என்பது பற்றி நேற்று விவாதிக்கவில்லைதானே அப்படி விவாதித்திருந்தால் கூட அது உண்மை அல்லது பொய் சொல்வதாகத்தானே அர்த்தம். ஒருவன் உண்மையைச் சொல்ல ம.க.இ.க காரனாக இருக்க வேண்டும் எனக் கருதுவது உங்களது என்ன போதாமை எனத் தனியாகச் சொல்ல வேண்டுமா....ஜனநாயகம் என்றால் என்ன என நீங்கள் விளக்குங்கள் அது எப்படி இந்தியாவில் தமிழகத்தில் உள்ளது எனக் கூறுங்கள் அது சரியா என விவாதிக்கலாம்.

கடைசி பாராவை ஒத்துக் கொள்கிறேன். நீங்கள் யாரும் புரட்சி செய்வதற்காக இணையத்திற்கு வரவில்லை. உங்களது ஆத்ம திருப்தி, எழுத ஆவல் எனப் பல காரணம் இருக்கலாம். ஆனால் ஈழத்தில் நடப்பது போராட்டம். அதைப் பற்றிப் பேசி உதவ நினைப்பவர்கள் தங்களது விருப்பத்திற்கு நடத்த இது பதிவர் சந்திப்பு அல்ல... வாழ்வா சாவா போராட்டம்... இதைக் கடுமையாக கூட சோல்லலாம். நாய் சிலவற்றில் வாயை வைக்கலாம். வீட்டுச் சோற்றுப்பானையில் வைத்தால் என்ன செய்வது என நீங்களே முடிவு செய்யுங்கள்

குடந்தை அன்புமணி said...

//எனக்குத் தெரிந்த வரையில் சென்னையில் எந்த அமைப்பு சரியான முழக்கங்களின் கீழ் ஆர்ப்பாட்டம் பேரணி உண்ணாவிரதம் ஈழத்திற்காக நடத்தினாலும் கடந்த இரு மாதமாக நான அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்தோ அல்லது லாஸ் ஆப் பே யிலோ சென்று விடுகிறேன்//

தங்களின் உணர்வை நான் புரிந்து கொள்கிறேன். உங்கள் ஆர்பாட்டத்தால் இலங்கைப் பிரச்சனை தீர்ந்து விட்டதா என்ன?(அதற்காக கலந்து கொண்டதை தப்பாக பேசவதாக மறு கருத்து போட வேண்டாம்) உங்களால் முடிந்ததை நீங்கள் செய்தீர்கள். எங்களால் முடிந்ததை எதையும் செய்ய நாங்களும் தயாராகவே இருக்கிறோம்.

//நாய் சிலவற்றில் வாயை வைக்கலாம். வீட்டுச் சோற்றுப்பானையில் வைத்தால் என்ன செய்வது என நீங்களே முடிவு செய்யுங்கள்//

உங்களைப்போல் நாங்களும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டால் அந்த நாய் ஓடிவிடும் என்றால் அதற்கும் நாங்கள் தயார்.

Jackiesekar said...

உங்களைப்போல் நாங்களும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டால் அந்த நாய் ஓடிவிடும் என்றால் அதற்கும் நாங்கள் தயார்//

வழி மொழிகிறேன் அன்பு மணி

Anonymous said...

அத்தனை ஈடுபாடுள்ள பதிவர்களும் அவரவர்களுக்குத் தெரிந்த மற்ற மொழி இணைய தளங்களில் புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் மருத்துவமனை குண்டுத் தாக்கி அழிப்பு போன்றவற்றை படங்களாகவும் செய்திகளாகவும் அனுப்புதல் வேண்டும்.
இந்தி மற்ற மொழிப் பத்திரிக்கைகளுக்கும் அனுப்ப வேண்டுகிறேன்.

Anonymous said...

//உங்களைப்போல் நாங்களும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டால் அந்த நாய் ஓடிவிடும் என்றால் அதற்கும் நாங்கள் தயார்.//ஜனநாயகத்தை முன்நிபந்தனைகளோடு அமல்படுத்த முடியாது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது உங்களால் ஏன் சாத்தியமில்லை என்பதை விளக்குங்கள். நீங்கள் ஈடுபட்டிருப்பது உங்கள் வீட்டு சமையலறை வேலை அல்ல. லட்சோப லட்சம் மக்களின் தலைவிதியைத் தீர்மானிப்பது.

Anonymous said...

நண்பரே நான் நாய் என்று சொன்னது இலங்கை ராணுவத்தை அல்ல...பதிவர்களை

குடந்தை அன்புமணி said...

//பெயரில்லா சொன்னது…

அத்தனை ஈடுபாடுள்ள பதிவர்களும் அவரவர்களுக்குத் தெரிந்த மற்ற மொழி இணைய தளங்களில் புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் மருத்துவமனை குண்டுத் தாக்கி அழிப்பு போன்றவற்றை படங்களாகவும் செய்திகளாகவும் அனுப்புதல் வேண்டும்.
இந்தி மற்ற மொழிப் பத்திரிக்கைகளுக்கும் அனுப்ப வேண்டுகிறேன்.//

/உங்களைப்போல் நாங்களும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டால் அந்த நாய் ஓடிவிடும் என்றால் அதற்கும் நாங்கள் தயார்.//
//ஜனநாயகத்தை முன்நிபந்தனைகளோடு அமல்படுத்த முடியாது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது உங்களால் ஏன் சாத்தியமில்லை என்பதை விளக்குங்கள். நீங்கள் ஈடுபட்டிருப்பது உங்கள் வீட்டு சமையலறை வேலை அல்ல. லட்சோப லட்சம் மக்களின் தலைவிதியைத் தீர்மானிப்பது.//
//நண்பரே நான் நாய் என்று சொன்னது இலங்கை ராணுவத்தை அல்ல...பதிவர்களை//
//நாய் சிலவற்றில் வாயை வைக்கலாம். வீட்டுச் சோற்றுப்பானையில் வைத்தால் என்ன செய்வது என நீங்களே முடிவு செய்யுங்கள்//
சபையில் தரம் உணர்ந்து பேசாமல் வந்த தாங்கள் முகமூடிக்கு பின்னால் கருத்தை தெரிவித்தாலும்,தங்கள் கருத்துக்கு மதிப்பளித்த நானும் மதித்து பதில் கூறினேன். தங்களின் ஆற்றாமையை வெளிப்படுத்தியமைக்கு நன்றி.

BOOPATHY said...

அரோக்கியமான ஓர் அலசல்.
கருத்து சொல்வதற்கு பெயர் ஒன்றும் அவசியமில்லை. யதார்த்தத்தை உண்மையான வலியோடு கூறிய பெயரில்லாதவ்ருக்கு வாழ்த்துக்கள்.
//ஈழத்தில் நடப்பது போராட்டம். அதைப் பற்றிப் பேசி உதவ நினைப்பவர்கள் தங்களது விருப்பத்திற்கு நடத்த இது பதிவர் சந்திப்பு அல்ல... வாழ்வா சாவா போராட்டம்..// சத்தியமான உண்மையிது.
வார்த்தை பிரயோகம் கொஞ்சம் கடுமையாக இருந்தபோதும் பொறுமையாக கையாண்ட அனைவரும் பாராட்டத் தக்கவர்கள்.