Wednesday, January 7, 2009

லாரிகள் வேலை நிறுத்தத்தால் யாருக்கு பாதிப்பு?


லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தால் பாதிப்பு லாரி உரிமையாளர்களும், மத்திய அரசுக்கும் மட்டுமா? இல்லையே... தென்னை மரத்தில தேள் கொட்டினால் பனை மரத்திலேயா அண்டகட்டும் என்பது முதுமொழி. ஆனால் இன்றைய நாளில் அந்த பொன்மொழி பொய்யாகிப் போனது. (இந்தப் பொன்மொழிக்கு வேறு அர்த்தம் உண்டா என்று தெரிந்தவர்கள் சொன்னால் ஏற்றுக் கொள்ளப்படும்.) லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் அரசுக்கும் , லாரி உரிமையாளர்களுக்கும் வருவாய் இழப்பு என்றால் அவர்கள் இருவரும் பேசித்தீர்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடலாம். தமிழ்நாட்டில் சுமார் 4000 லாரிகள் ஓடுவதாக ஒரு உத்தேச கணக்கு சொல்கிறது. ஒரு லாரிக்கு இரண்டு பேர் என்றால் சுமார் எட்டாயிரம் தொழிலாளிகள் மற்றும் அதைச் சார்ந்த தொழிலாளிகள், சுமைதூக்கும் தொழிலாளிகள் மற்றும் லாரி போக்குவரத்தை நம்பியுள்ள விவசாயிகள், வணிகர்கள், இவர்களை நம்பியுள்ள பொதுமக்கள் என்று பட்டியல் நீள்கிறது. பாதிப்புகளில் சில...திருப்பூரில் உற்பத்திசெய்த பனியன்கள் தேக்கம்.நாமக்கல் மாவட்டங்களில் முட்டைகள் தேக்கம்.பொங்கல் நெருங்கி வரும் வேளையில் பரமக்குடியில் வெல்லம் தேக்கம்.காய்கறிகள் வரத்து பாதிப்பு.இந்நிலையில் நாளைமுதல் பால், தண்ணீர் லாரிகளும் ஓடாது என்று அறிவிப்பால் எவ்வளவு பாதிப்புகள் நேரும் என்று நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. (தஞ்சை மாவட்டங்களில் மட்டும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை. பொங்கல் திருவிழா நெருங்கி வருவதால் விவசாயிகளை மனதில் கொண்டு லாரிகளை இயக்குவதாக அவர்கள் கூறியிள்ளனர்.) பெட்ரோல் விலையை மட்டும் நள்ளிரவு முதலே உயர்த்தும் மத்திய அரசு டாலருக்கு நிகரான மதிப்பு குறைந்து வரும் வேளையில் உடனடி நடவடிக்கை எடுத்தால்தான் மக்களின் நன்மதிப்பை பெற முடியும். இல்லையென்றால் மக்களின் மௌனம் தேர்த-ல் எதிரொ-க்கும் என்பது வரலாறு மறுக்கமுடியாத உண்மை.பெட்ரோல், டீசல் விலை குறைப்பு இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என்றும், சமையல் எரிவாயு விலை ரூபாய் 25 முதல் 30 வரை குறைக்கப்படும் என்றும் கூறிய பெட்ரோ-யத்துறை அமைச்சர், லாரி உரிமையாளர்களை சிலர் தவறாக வழிநடத்துகின்றனர் என்கிறார். எது எப்படியோ விரைவில் ஒரு சுமூகமான தீர்வு எட்டவேண்டும். அதுவே நாட்டுக்கும் நல்லது அரசுக்கும் நல்லது.

3 comments:

Unknown said...

பங்குச்சந்தை வீழ்ச்சி, சத்யம் கம்யூட்டர் குற்றவாளி என பெருமுதலாளிகளை பாதிக்கும் காரணிகளில் செலுத்தும் கவனம், அன்றாடம் காய்ச்சி மக்களிடம் அரசு செலுத்தவில்லை. ஒரு வேலை தயாநிதி மாறனுக்கோ, அழகிரிக்கோ அல்லது கார்த்தி சிதம்ரத்துக்கோ ஒரு 1000 லாரிகள் இருந்திருந்தால் மத்திய அரசின் பேச்சு வார்த்தை லாரி உரிமையாளர்களுக்காக சாதகமாக அமைய வாய்பிருக்கிறது.

- சென்னைத்தமிழன்

குடந்தை அன்புமணி said...

\\ஒரு வேலை தயாநிதி மாறனுக்கோ, அழகிரிக்கோ அல்லது கார்த்தி சிதம்ரத்துக்கோ ஒரு 1000 லாரிகள் இருந்திருந்தால் மத்திய அரசின் பேச்சு வார்த்தை லாரி உரிமையாளர்களுக்காக சாதகமாக அமைய வாய்பிருக்கிறது.\\
நூற்றுக்கு நூறு உண்மையானது, தங்கள் கருத்து. 'காலம் ஒரு நாள் மாறும். நம் கனவுகள் யாவும் தீரும்' என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்.

Unknown said...

காலம் மாறுவதாக தெரியவில்லை. கனவு கானவும் நான் கலாமில்லை. ' கனவுக்கு பதில் அறிவியல், கண்ணீருக்கு பதில் போராட்டம் ' என மார்க்ஸ் வழியில் சென்றால் மாற்றமுண்டு. மாறாததை மாற்றும் சூத்திரம் இது ஒன்றே. - சென்னைத்தமிழன்