
இலங்கையில் போர் நடைபெற்று அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்து வருகிறது இலங்கை அரசு.இலங்கைக்கு இந்திய அணிகள் கிரிக்கெட் விளையாடச் செல்லக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் குரல் கொடுத்தனர். ஆனால் யாவும் பயனற்று போய்விட்டது. ஒரு(மூன்று) நாள் போட்டியில் கலந்து கொள்ள இலங்கைக்கு பயணமானது இந்தியஅணி. (இதேபோல்தான் கார்கில் யுத்தம் நடைபெற்றபோதும் பாகிஸ்தானுடன் விளையாடச் சென்றது) இந்தியர்களாகிய நாம் நம் எதிர்ப்பைக் காட்ட இந்தியா/ இலங்கை அணி விளையாட்டை தொலைக்காட்சியில் பார்ககாமல் புறக்கணிப்போம்.
12 comments:
கண்டிப்பாக தமிழர்கள் தன் மதிப்பிருந்தால், கண்டிப்பாக இந்த தொடரை புறக்கணிக்க வேண்டும்
சாவு வீட்டுல கிரிக்கெட் பாக்குறவன் மனுசனா?
உங்கள் குடு்ம்பத்தின் மாத வருமானம் ரூ. 5000க்கும் கீழ் இருக்குமேன வைத்துக்கொள்வோம். உங்களுக்கு சச்சினுக்கான அனைத்து தகுதிகளும் உள்ளதெனவும் ஊகித்துக்கொள்வோம்.
நிச்சயமாக உங்களால் தமிழ்நாடு இரஞ்சி டீமில் கூட இடம் பிடிக்க முடியாது. கிரிகட் எப்போதும் எழைகளின் விளையாட்டாக இருந்த்தே இல்லை.
கிரிக்கட் ஆர்வம் உள்ளவனின் நேரத்தையும், பணத்தையும் உறிஞ்சும் அட்டையாகத்தான் இருந்து வருகிறது.
கிரிக்கட் விளையாட்டு வீரர்களுக்கு மனிதர்கள் மீதோ அல்லது தேசத்தின் மீதோ அக்கரைப்படவேண்டும் என நீங்கள் நினைப்பது உங்கள் மீது அனுதாப்படத்தான் வைக்கிறது.
அவர்களின் கவலையெல்லாம் கோக் விளம்பரத்திற்கு கால் ஷீட் எப்ப தருவது. ஒட்டுவது, எம்ஆர்எப் விளம்பர ஸ்டிக்கரை எங்கே ஒட்டுவது, அடுத்த முறை எப்படி பெப்சி விளம்ரம் நடிப்பது, எவளை ஏமாற்றி வலையில் விழ வைப்பது என்பது பற்றியதான கவலைதான்.
நீங்கள் இந்த கிரிக்கட் தொடரை புறக்கணித்தாலும், புறக்கணிக்கவில்லையென்றாலும் மக்கள் நலனை புறக்கணித்த (சூது) ஆட்டமாகவே கிரிக்கட் இருந்து வருகிறது என்பதான் உண்மை.
வேண்டுமானால், இலங்கைத்தமிழன் முத்தயா முரளிதரன் கையினால் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து இந்திய அணி தோல்வியை தழுவட்டும் என வாழ்த்துவோம்.
- சென்னைத்தமிழன்
உங்களுக்கு பார்க்க பிடிக்கவில்லை என்றால் சத்தம் போடாமல் செல்லவும். ஊரை கூட்டி ஒப்பாரி போட்டு என்னாக போவுது ?
இலங்கை பிரச்சனையில் ஏதாச்சும் நடக்க வேண்டும் என்றால் பிரபாகரனை முதலில் இந்தியாவிடம் சரண்டைய சொல்லவும்
//மகிழ்நன் சொன்னது…
கண்டிப்பாக தமிழர்கள் தன் மதிப்பிருந்தால், கண்டிப்பாக இந்த தொடரை புறக்கணிக்க வேண்டும்//
தங்களைப் போன்றவர்களின் ஈர நெஞ்சமுடையவர்களின் ஆதரவால்தான் தமிழர்கள் இதுவரை தாக்குப்பிடி்கிகறார்கள்.
//ஜுர்கேன் க்ருகேர் சொன்னது…
சாவு வீட்டுல கிரிக்கெட் பாக்குறவன் மனுசனா?//
சரியா சொன்னீ்ங்க. நன்றி!
//செம்புலம் சொன்னது…
வேண்டுமானால், இலங்கைத்தமிழன் முத்தயா முரளிதரன் கையினால் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து இந்திய அணி தோல்வியை தழுவட்டும் என வாழ்த்துவோம்.//
நானும் பிரார்த்தனை செய்கிறேன்.
//பெயரில்லா சொன்னது…
உங்களுக்கு பார்க்க பிடிக்கவில்லை என்றால் சத்தம் போடாமல் செல்லவும். ஊரை கூட்டி ஒப்பாரி போட்டு என்னாக போவுது ?
இலங்கை பிரச்சனையில் ஏதாச்சும் நடக்க வேண்டும் என்றால் பிரபாகரனை முதலில் இந்தியாவிடம் சரண்டைய சொல்லவும்//
பெயரைக்கூட சொல்லத் தெம்பி்ல்லாத ஒரு எட்டப்பன் பாருங்கள்.
அண்ணேன் - இப்பதான் நிறைய பேர் பார்ப்பாங்க.
அட இத விடுங்க - அங்க உள்ள தமிழ் மக்கள் எத்துனை பேர் பார்க்கிறாங்களோ
//நட்புடன் ஜமால் சொன்னது…
அண்ணேன் - இப்பதான் நிறைய பேர் பார்ப்பாங்க.
அட இத விடுங்க - அங்க உள்ள தமிழ் மக்கள் எத்துனை பேர் பார்க்கிறாங்களோ//
//ஜுர்கேன் க்ருகேர் சொன்னது…
சாவு வீட்டுல கிரிக்கெட் பாக்குறவன் மனுசனா?//
நான் வழிமொழிகிறேன்.
Haiyaaa.... innaikku inthiya jeyichuttanga.... muthia muralitharan endra thamilan vilayaadiyathaal paarththen.
//Bala சொன்னது…
Haiyaaa.... innaikku inthiya jeyichuttanga.... muthia muralitharan endra thamilan vilayaadiyathaal paarththen.//
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்...
Post a Comment