Wednesday, January 21, 2009

வருவாயை விட்டுத்தருவாரா கருணாநிதி?


முன்னாள் முதல்வர்கள் கொண்டுவரும் திட்டங்களை அடுத்து ஆள வருபவர்கள் நிறுத்தி வைக்கவோ அல்லது கிடப்பிலேயே போடத்தான் விரும்புவார்கள். ஆனால் தற்போது முதல்வராக இருக்கும் கருணாநிதி அவர்கள், முன்னாள் முதல்வர் கொண்டுவந்த 'மதுபான கடைகளை அரசே ஏற்று நடத்தும்' என்ற கொள்கையை மட்டும் இவரும் ஏற்றறுக் கொண்டார். காரணம்? கொட்டும் வருமானம் கோடிக்கணக்கில் அல்லவா!
(இன்னும் சில 'தொழில்'கள் கூட இருக்கின்றன. அதையெல்லாம் விட்டு வைத்திருக்கிறார்களே என்று ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டும்.)
திடீரென 'ஞானதோயம்' வ்நத ராமதாஸ் அவர்கள் 'பூரண மதுவிலக்கு' கொள்கையை உயர்த்திப்பிடித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். இதற்காக முதல்வரை அடிக்கடி சந்தி்த்தும் வருகிறார்.
இந்நிலையில் 'கள்' இறக்க அனுமதி வேண்டி விவசாயிகள் போராட ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு சரத்குமாரின் ச.ம.க. உட்பல சில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அடிக்கடி 'உள்ளேன் அய்யா' என என்ட்ரி கொடுக்கும் காங்கிரஸ் கட்சியினர் 'கள்' இறக்கும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கிறார்கள். முழு மதுவிலக்கு காங்கிரஸ் அடிப்படை கொள்கை. எனவே இதை ஒருபோதும் அனுமதிக்காது. இதற்காக நாங்கள் விவசாயிகளுக்கு எதிரானவர்கள் அல்ல, அவர்களுக்காக விவசாய கடனை மத்திய அரசும், மாநில அரசும் தள்ளுபடி செய்துள்ளது. விவசாயிகள் 'கள் ' இறக்குவதை தவிர்த்து, பதநீர் உற்பத்தியை பெருக்கலாம். இதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக "காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் 'பூரண மதுவலிலக்கு' இல்லை" என்கிறார் கருணாநிதி.விவசாயிகளுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சியும் போராட்டத்தில் குதித்துள்ளது.
இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

3 comments:

Unknown said...

குவாட்டரும், பிரியாணியும் இல்லாமல் எந்த அரசியல் கட்சியும் நடத்த முடியாது என்பது எல்லா அரசியல் கட்சியும் தெளிவாக இருக்கிறார்கள்.

கங்கை கொண்டானில் தாமிரபரணி ஆற்றின்
வாட்டர் வாரியத்தை தனியாருக்கு விட்டுவிட்டு, குவாட்டர் வாரியத்தை அரசே நடத்துகிறது.

நமது கிராமம் மற்றும் தொட்டிற்குழந்தை திட்டங்கள் ஜெ கொண்டுவந்த திட்டங்களென தி.மு.க. அரசு கிடப்பில் போட்டது. ஆனால் டாஸ்மாக் மட்டும் பாஸ்மார்க் வாங்கியது.

மது தடை செய்யவேண்டிதுதான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதை விட கொடியது தங்கபாலு, ஜெ, மாயாவதி, மம்தா, லல்லு, சிபுசோரன், ராமர் மச்சான் அத்வாணி, சீதையின் மச்சினன் ராம கோபாலன் போண்ற அரசியல் வியாதிகளை தடை செய்தால் இந்திய தேசமே கையெடுத்து கும்பிடும் என்பதுதான் மக்கள் கருத்து.

- சென்னைத்தமிழன்

குடந்தை அன்புமணி said...

சரியாச்சொன்னீங்க பாஸ்.

Unknown said...

வலைப்பதிவாளர் கூட்டத்திற்கு வருக..

நாள் - 25-01-2009

நேரம் - மாலை -5.30 முதல் 8 மணி வரை

இடம் - கிழக்கு பதிப்பகத்தின் மொட்டைமாடி

கிழக்குப்பதிப்பகம் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் அமைந்துள்ளது . (எல்டாம்ஸ் ரோடு மியூசிக் வோர்ல்டு அருகில் )


மேலதிக விபரங்களுக்கு -



அதிஷா - 9884881824

லக்கிலுக் - 9841354308

முரளிக்கண்ணன் -9444884964

நர்சிம் -9940666868

கோவிக்கண்ணன் - 90477 44151


- சென்னைத்தமிழன்