


இலங்கையில் போர்நிறுத்தம் வேண்டி திருமாவளவன் செங்கல்பட்டு அருகே இரண்டு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். முதல்வர் கலைஞர் கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே ஈழத்தமிழர் பிரச்சினையில் தனது பங்களிப்பு பற்றி கூறி, திருமாவளவன் அவசரப்பட்டு தன்னிச்சையாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார் என்றும் இந்திய அரசின் போக்கினை இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்து பார்போம். அதன்பிறகு என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்வோம் என்று கூறியுள்ளார். கொழும்பு சென்றுள்ள சிவசங்கரமேனன் பல்வேறு தலைவர்களை சந்தித்து வருகிறார். ராஜபக்சேவை இனிதான் சந்திக்க இருக்கிறார். என்ன முடிவு ஏற்படும் என்பதை அறிய உலகமே காத்திருக்கிறது. ஈழத்தில் நடைபெறும் போரின் உக்கிரத்தை காட்டும் சில படங்கள்.... உங்கள் பார்வைக்கு!
3 comments:
அவலங்களுக்குள்ளே வாழப் பழகி விட்டவர்கள் நாங்கள்?? எமது தலை விதி இது தான் என்றால் யாரால் தான் இதனை மாற்ற முடியும்?
ஈழ மண்ணில் ஒவ்வோர் சொட்டு இரத்தமும் விதையாகும்.
சிங்களத்தில் கடைசித்தமிழன் இருக்கும் வரை போராட்டம் தொடரும்.
'தமிழன் என்றொரு இனமுண்டு,
தனியே அவனுக்கொரு குனமுண்டு,
அவன் - புறநானூற்று அணுகுண்டு என உலகம் சொல்லும் நாள் வரும்.
ஒரு கோடி ஆண்டுகள் அடிமைப்பட்ட எம் தமிழ் விடுதலையாகும்,
தமிழன் வாழாத நாடில்ல....
தமிழனுக்கென ஒரு நாடில்லை எனும் நிலை மாறும்...
தனி ஈழம் மலர்ந்தே தீரும்.
தமிழைப்பழித்தோருக்கு சங்காரம் நிச மென சங்கே நீ முழங்கு....
- சென்னைத்தமிழன்
\\அவலங்களுக்குள்ளே வாழப் பழகி விட்டவர்கள் நாங்கள்?? எமது தலை விதி இது தான் என்றால் யாரால் தான் இதனை மாற்ற முடியும்?\\
தங்களின் வலியை எங்களால் உணரமுடிகிறது கமல். செம்புலம் அவர்கள் சொல்வது போல் நம்பிக்கையுடன் இருப்போம். எதிர்கொள்வோம் நாளைய விடியலை!
Post a Comment