Thursday, January 29, 2009

ஈழப்பிரச்சினையை கண்டித்து தமிழக வாலிபர் தீக்குளித்து மரணம்.

ஈழத்தில் அப்பாவித்தமிழர்களை கொன்று குவிக்கும் இராஜபக்சே அரசை கண்டித்து பல்வேறு போராட்டங்களை தமிழகம் முழுவதும் நடந்துவருகிறது. மனித சங்கிலி போராட்டம், ரயில் மறியல், சாலை மறியல், உண்ணாவிரதம் என்று அரசியல், சினிமாதுறையினர்,மாணவர்கள், பொதுமக்களும் எவ்வளவோ போராட்டங்கள் நடத்தி மத்திய , மாநில அரசுகளை முடுக்கிவிட்டு இந்திய அரசை போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்தனர். தமிழக மக்களின் தொடர் போராட்டத்தை கண்டு மசிந்த மத்திய அரசின் உத்தரவுக்கேற்ப இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மேனன் இலங்கை சென்று வந்தார். தற்போது பிரணாப் முகர்ஜியும் சென்று வந்துள்ளார். ஒவ்வொருவரும் சென்று வந்தும் ஒரு நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் தூத்துக்குடியைச் சேர்நத வாலிபர் முத்துக்குமரன் சென்னையில் பணிபுரிந்து வந்தவர், ஈழப்பிரச்சனையை கண்டித்து இன்று (29.1.08)காலை 10.45 மணியளவில் சென்னை சாஸ்திரிபவன் முன்பாக தீக்குளித்தார் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். ஈழத்தில் பலர் குண்டு வீசி கொல்லப்பட்டதை படித்தும், தொலைக்காட்சியில் பார்த்தும் வந்த தமிழக மக்களுக்கு இந்த மரணம் மிகுந்த பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசும், மத்திய அரசும் நிலமையி்ன் தீவிரத்தை உணர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாலிபருக்கு தமிழ் பிளாக்கர்ஸ் மற்றும் பொதுமக்கள் சார்பாக ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக்கொள்வவதோடு அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.

3 comments:

தமிழ். சரவணன் said...

ஐயோ உங்க குடும்பத்த ஒரு கணம் நீங்க நினைச்சி பாக்கலையே...

Unknown said...

யாருக்கு புத்தி வரவேண்டும் என நண்பர் தீக்குளித்தார் என்பது தெரியவில்லை. ஆனால் தம்மீது பற்ற வைத்த தீ தமிழரி நெஞ்சத்தில் பெருந்தீயாய் பற்றி எரியவேண்டுமென நிச்சயம் நினைத்திருப்பார்.

தீப்பற்றி எரியும் நேரத்தில் பிரணாப் முகர்ஜி கூடுதலாக 100 ராடார்களை இலங்கைக்கு விற்று விட்டு திரும்பியிருப்பார் என நம்பலாம்.

அநேகமாக கலைஞர் பாராளுமன்ற தேர்தலுக்குள்ளாக இரண்டு வாய்தா போட்டு இனியும் பொறுக்க முடியாது என தீர்மானம் எழுதுவார்.

அப்பாவித்தமிழர் சாகிரார்கள் என்பது எப்படி உண்மையாகிறது பாருங்கள்.

- சென்னைத்தமிழன்

Anonymous said...

இதையும் மூடி மறைத்து,
இன்னும் ஊறுகாய் போடப்பார்த்தால்
காங்கிரசுடன் சேர்த்துக்
கலைஞரையும் ஊறுகாய்
போட வேண்டியது தான்.